Skip to content
Part 5 of 9

பக்கம் 5

வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்

4. ஹஸன் அலி உமரி அவர்கள்  النُّجُومِ - நுஜூம்' என்றால் குறிப்பாக ஜோதிடம் ஆகும் என்று கூறுகிறார்.

பதில் :

இவ்வாறு அவர் கூறுவதற்கு அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாஹ்வின் ஆதாரம் எங்கே?.

இமாம் அபூஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ,

لا يحل لأحد أن يأخذ بقولنا ما لم يعلم من أين أخذناه. (ابن عابدين في حاشيته على البحر الرائق ( 6/293)

நாம் எங்கிருந்து எடுத்தோம் என்பதை அறியவில்லை என்றால் என்னுடைய வார்த்தையைச் சுமப்பதற்கு எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. (இமாம் இப்னு ஆபிதீன் - ஹாஷியா)

இது தான் அனைத்து உலமாக்களின் அடிப்படையாகும்.

5.  ஹஸன் அலி உமரி அவா்கள் நுஜூம் என்பது குறிப்பாக ஜோதிடம் என்று உலமாக்கள் விளக்கமாக கூறினார்கள் என்று கூறுகிறார்

பதில் :

நாங்கள் கேட்கிறோம் "உலமாக்கள் எந்த அல் குர்ஆன் ஆயத்தின் மூலமாக அல்லது எந்த ஆதரப்பூர்வமான ஹதீஸின் மூலமாக النُّجُومِ - நுஜூம்' என்றால் குறிப்பாக ஜோதிடம் ஆகும் என்கின்றனர்?"

6. ஹஸன் அலி உமரி கூறுகின்றார் நாங்கள் உலமாக்களை மதிக்கவில்லை, இழிவாக்குகின்றோம்.

பதில் :

இமாம் ஷாஃபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஃபஜ்ரில் குன்னூத் ஒதுவதை அனுமதியளித்தார்கள். இது நபிவழிக்கு முரண் என்றும், இது தவறு என்றும் கூறுவது இமாம் ஷாஃபியை இழிவாக்கியதாக ஒரு போதும் அமையாது. அதுபோன்று தான் உலமாக்களின் தவறான தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டுவது அந்த மதிப்பு மிக்க உலமாக்களை இழிவாக்குவது ஆகாது. மாறாக நபியின் வழிமுறைக்கு வெற்றி கொடுத்ததாகும்.

அல்லாஹ் கூறுகிறான்,

وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

அவனையன்றி (வேறெவரையும்) உங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி அவர்களை பின்பற்றாதீர்கள். எனினும் நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7 : 3)

இதனை இன்றைக்கு நாம் அதிகமாக காண்கின்றோம். அல்லாஹ் இறக்கிய வஹியை விட்டுவிட்டு உலமாக்களின் தவறான தீர்ப்புகளை பின்பற்றக் கூடியவர்களாக இன்றைக்கு சமூகங்கள் மாறிவிட்டார்கள்.