Skip to content
Part 2 of 9

பக்கம் 2

வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்

இதனை இன்னும் விரிவாக பின்வருமாறு காண்போம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்,

اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) உங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி அவர்களை பின்பற்றாதீர்கள்; எனினும் நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (சூரா அஃராஃப் : 3) 

அல்லாஹ் இந்த ஆயத்தில் உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்ட அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாஹ்வையும் பின்பற்றுமாறு கட்டளையிடுகிறான். நாம் கூறும் தீர்ப்புகள் அனைத்தும் அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வின் மூலமும் ஸஹாபாக்கள் செயல்படுத்திய வழிமுறையிலும் தான் மக்களுக்கு எடுத்து வைக்கின்றோம் .

"வானவியல் பற்றிய கல்வி குஃப்ர்" என்பது அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வின் தீர்ப்பாகும். இந்த தீர்ப்புக்கு எங்களின் முதலாவது ஸலஃப் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், அதனை அவ்வாறே சுமந்த ஸஹாபாக்களும் ஆவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்,

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ

அவன் எத்தகையவனென்றால் சூரியனை மின்னும் ஒளிமிகுந்ததாகவும், சந்திரனை (வெளிச்சந்தரக்கூடிய) பிரகாசமாகவும் ஆக்கினான். சூரியன் சந்திரனுடைய தங்குமிடங்களை அல்லாஹ் தான் நிர்ணயம் செய்தான். (10:5)

“ مَنَازِلَ" (மனாசில்) - நிற்கும் இடங்கள்.

சந்திரன், சூரியன் எந்த இடத்தில் நிற்கும் என்பதை அல்லாஹ் தான் (தக்தீர்) நிர்ணயம் செய்தான் என்று அவனுடைய அல்-குர்ஆனிலே நமக்கு எடுத்துக் காட்டுகின்றான். எனவே சூரியனும், சந்திரனும் இந்த இடத்தில் தான் நிற்கும் என்று யாராலும் கூற முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நிர்ணயம் செய்ததை யூதர்களும், கிறித்தவர்களும் உருவாக்கிய வானவியல் கல்வியின் மூலமாக கூறுவது, அவர்கள் அல்லாஹ் மட்டுமே அறிந்த விஷயத்தில் தங்களை முற்படுத்திக் கொண்டார்கள். இது மிகவும் ஆபத்தானதாகும்.