பக்கம் 5
உழ்ஹிய்யா(குர்பானியின்) சட்டங்கள்
உழ்ஹிய்யாவிலும் ஏழு பேர் கூட்டுச் சேரலாம் என்ற கருத்து எவ்வாறு வருகிறது என்பதைப் பற்றி இமாம் அபூ தய்யிப் ஸித்தீக் ஹஸன் ஹான் அல் கனூஜி அல் புஹாரி (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு கூறுகிறார்கள்,
ويصح اشتراك سبعة في بدنة أو بقرة ، وإن كانوا أهل بيوت شتى ، وهو قول العلماء ، وقاسوا الأضحية على الهدي
வெவ்வேறு குடும்பங்களாக இருந்தாலும் மாட்டிலும், ஒட்டகத்திலும் ஏழு பேர் பங்கு பெற முடியும் என கூறப்படுகிறது. இது உலமாக்களின் வார்த்தையாகும். அந்த உலமாக்கள் ஹதியு (குர்பானியின்) சட்டத்தை, உழ்ஹிய்யா (குர்பானியின்) சட்டத்துக்கு கியாஸ் செய்துதான் அந்த கூற்றை முன்வைக்கிறார்கள்.
இமாம் ஸித்தீக் ஹஸன் ஹான் அல் கனூஜி அல் புஹாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மேற்கூறிய கூற்றின் அடிப்படையில், உழ்ஹிய்யாவில் கூட்டாக குர்பானியை நிறைவேற்றுவதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ ஆதாரம் இல்லை என்பதை புரியலாம்.
கியாஸ் என்பது ஆதாரம் இல்லாத ஒன்றுக்கு வேறு ஒரு விடயத்தின் சட்டத்தை அதாரம் காட்டி சட்டம் கூறுவதாகும். அதனை இன்னும் சுருக்கமாகக் கூறினால் மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி தீர்ப்பு சொல்வதே கியாஸ் ஆகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
குறிப்பு : அர் ரவ்ததுந் நதிய்யா நூலுக்கான விளக்கவுரையில் இருந்து