Skip to content
Part 4 of 5

பக்கம் 4

உழ்ஹிய்யா(குர்பானியின்) சட்டங்கள்

வணக்கம் சார்ந்த குர்பானியில் குறைந்த பட்சம் எந்தப் பிராணியை குர்பானி கொடுக்கலாம்?

ஆடுதான் குர்பானி கொடுப்பதற்கு ஆகக் குறைந்த தகுதியான பிராணியாகும். அதற்கு கீழ் எந்தப் பிராணியையும் (வணக்கத்துக்காக செய்யப்படும்) குர்பானியாகக் கொடுக்க முடியாது.

ஹதியு குர்பானியில் தான் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பங்கு கொள்ள முடியும். அதுவும் மாடு, ஒட்டகம் பிராணியில் தான் ஒன்று சேர முடியும். ஏழு பேர் பங்கு சேர்வது ஆட்டில் கிடையாது. ஆட்டில் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் மட்டுமே குர்பானி கொடுக்க முடியும்.

ஹதியு குர்பானி என்பது ஹஜ்ஜுக்காக பயணம் மேற்கொண்டவர்கள் நிறைவேற்றும் குர்பானியாகும். அது மட்டுமின்றி ஹத்யு என்ற வகை குர்பானியை ஹஜ்ஜை நோக்கி சென்றவர்கள் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும். எனவேதான் ஒருவருக்கு தனியாக குர்பானி கொடுப்பதற்கு வசதி இல்லாவிட்டாலும் அவர் அதனை தவிர்க்க முடியாது. மாறாக, ஏழு பேர் சேர்ந்தாவது மாட்டில் அல்லது ஒட்டகத்தில் அதனை நிறைவேற்றியாக வேண்டும். அவ்வாறு கூட்டாக சேர்ந்தும் நிறைவேற்றுவதற்கு வசதியை பெறாவிட்டால் ஹஜ்ஜின் காலத்தில் மூன்று நாட்களும், தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிய பின்னால் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

இதனையே பின்வரும் அல் குர்ஆன் வசனம் கூறுகிறது,

فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ

(யார் ஹஜ் வரை உம்ரா செய்யும் சௌகரியத்தைப் பெற்று) உம்ராவை முடித்துக் கொண்டு ஹஜ்ஜின் பால் செல்வாரானால் ஹத்யுவில் இருந்து அவருக்கு எது இயலுமோ அது அவரின் மீது கடமையானதாகும். ஆனால், (ஹத்யுவில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ்ஜின் காலத்தில் மூன்று நாட்களும் இருப்பிடம் திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். அவை பூரணமான பத்து நாட்களாகும். (அல் குர்ஆன் 2 : 196)

உழ்ஹிய்யாவில் ஏழு பேர் மாட்டில் அல்லது ஒட்டகத்தில் கூட்டாக சேர்ந்து நிறைவேற்றுவது மார்க்கத்தில இல்லாத ஒன்றாகும்.