பக்கம் 2
உழ்ஹிய்யா(குர்பானியின்) சட்டங்கள்
ஒரு குடும்பத்தில் எத்தனை நபா்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்குமாக, ஒரு ஆட்டை உழ்ஹிய்யா கொடுத்தால் அது போதுமானது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், குடும்பத்தில் உள்ள நபா்களின் எண்ணிக்கை அல்ல. மாறாக திருமணத்தின் மூலம் தான் ஒரு குடும்பம் கணக்கிடப்படுகிறது என்பதை நாம் கவனத்தில கொள்ள வேண்டும்.
திருமணத்தால் பிரியாமல் ஒரே குடும்பமாக இருக்கும் நிலையில், குறைந்த பட்சம் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதற்கான சக்தியை அக்குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பதில் எந்த குறையும் இல்லை. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பம் சேர்ந்து ஒரு பிராணியை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது. எனவே ஒரு குடும்பத்தில் உள்ளவா்கள், தங்களி்ன் மீதும் உள்ள கடமையாகக் கருதி, தன் குடும்பத்திற்க்காக ஒரு ஆட்டையேனும் உழ்ஹிய்யாவாக கொடுக்க வேண்டும்.
உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிபானதா? சுன்னத்தானதா?
இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்,
لا أحب لأحد ممن قَوِيَ على ثمنها أن يتركها
யாருக்கேனும் சக்தி இருந்தும், அதனை (உழ்ஹிய்யா கொடுப்பதை) தவிர்ந்து கொள்வதை நான் விரும்பமாட்டேன்.
இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவா்களுடைய இக்கருத்தில் தான் ரபீஆ (ரஹிமஹுல்லாஹ்), அல் அவ்ஸாஈ (ரஹிமஹுல்லாஹ்), அபூ ஹனீபா (ரஹிமஹுல்லாஹ்), லைஸ் (ரஹிமஹுல்லாஹ்) போன்றவர்கள் இருக்கிறார்கள். அதாவது, சக்தி உள்ளவர் மீது உழ்ஹிய்யா கொடுப்பது கடமை என்று அவர்கள் கூறுகிறார்கள்.