பக்கம் 1
சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்
சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை. இதனால், “அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா” (துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்) மிகவும் முக்கியமான நாட்களாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில்,
- ”வல்ஃபஜ்ரி வலயாலின் அஷ்ர்” - “பத்து இரவுகளின் மீது ஆணையாக!” என்று சத்தியம் இட்டு கூறும் 89:2 என்ற வசனமும்
- “வயத்குரு ஸ்மல்லாஹி ஃபீ அய்யாமின் மஃலூமாத்தின்” - 'ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினைவுக் கூறுவது" (22:28) என்ற வசனமும்
துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களையே குறிக்கின்றன என அல்குர்ஆனின் விரிவுரையாளர்களில் இப்னு உமர்,இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்கும்) போன்ற நபித்தோழர்களும், இமாம் இப்னு கதீர் (ரஹீமஹுல்லாஹ்) போன்ற இமாம்களும் குறிப்பிடுகின்றனர்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَا الْعَمَلُ فِي أَيَّامِ الْعَشْرِ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي هَذِهِ ". قَالُوا وَلاَ الْجِهَادُ قَالَ " وَلاَ الْجِهَادُ، إِلاَّ رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَىْءٍ ".
(துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களை விட மிகச் சிறந்தது எது ? என நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதும் தோழர்கள், '(அதைவிட) அறப்போர் மிகச் சிறந்ததல்லவா ? எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'அறப்போர் கூட மிகச்சிறந்ததல்ல. ஆயினும் போர்க்களம் சென்று தனது உயிரையும் உடமைகளையும் அர்ப்பணித்துவிட்ட (திரும்பியவராக)வரின் அறப்போரை விடச் சிறந்ததல்ல' எனக் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். (புஹாாி)