பக்கம் 8
ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?
இது போன்ற நிலைகள் ஒரு முஸ்லிமை வந்தடைவதன் காரணம் அவனிடத்திலுள்ள கொள்கை ரீதியான குறைபாடாகும். அதிலும் குறிப்பாக தன் இரட்சகனை பற்றி அவன் அறியாமல் இருப்பதனால், தன் வாழ்வில் முகம் கொடுக்கின்ற கஷ்ட நிலையில் தனது இரட்சகனை நினைவு கூறி, அந்தக் கஷ்டத்தில் பொறுமையோடு இருப்பதற்கு அவன் மறந்து விடுகிறான். இந்த விஷயத்தில் அவன் எந்தளவுக்குத் தரமானவனாக இருப்பானோ அந்தளவுக்கு அவனது வாழ்வில் அறிந்ததை நிலைநாட்டுவதில் தரமானவனாக இருப்பான்.
இந்தப் பண்பு மனிதர்களிடத்தில் இல்லாததன் காரணமாகவே சமூகத்தில் இன்று முஸ்லிம்கள் ஷிர்க் என்று அடையாளம் காட்டிய பின்னாலும், குப்ர் என்று எச்சரித்த பின்னாலும் அவற்றை அல்லாஹ்வுக்கு அஞ்சி விட்டுவிடுவதில் கவனமற்றவர்களாக இருக்கின்றனர். அது மட்டுமின்றி நம்மில் பலர் அல்குர்ஆனும், சுன்னாவும் காட்டித் தராத விஷயங்களுக்காக தனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவு செய்து அதற்காகவே நமது வாழ்வை அர்ப்பணிக்கின்றோம்.
குப்ர் நாட்டில் வாழ்வது மட்டுமின்றி அந்த நாட்டின் குப்ரான சட்டங்களை நிலைநாட்டுவதற்கென்று போராடுகின்றனர். அல்லாஹ் அல்லாதவற்றின் மீது திருப்தியை நாடி இவற்றைச் செய்வதன் மூலமாக அவர்கள் ஷிர்க்கிலும், குப்ரிலும் மாட்டிக் கொள்கிறார்கள். இது போன்ற நிலை மாற வேண்டுமானால் மனிதர்களின் இதயங்களில் அகீதா எனும் கொள்கை பதியப்பட வேண்டும்.
இந்த முஸ்லிம் சமூகத்தில், ஏகத்துவம் என்பது சாதாரனமாக அந்த வார்த்தையோடு முடிந்து விடுகிறது. ஏகத்துவத்தை அறிந்து, அதன் அடிப்படைகளைப் புரிந்து, அதன் விளக்கங்களைப் பெற்று, அதனடிப்படையில் செயற்படுவதன் மூலம் அது நிலைநாட்டப்படுவதில்லை. இந்த நாட்டில் நாங்கள்தான் தவ்ஹீத்வாதிகள் எனக் கூறிக் கொண்டு தவ்ஹீதைப் பேசுகின்றவர்களின் நிலை என்னவென்றால், குப்ரான சட்டங்களைக் கொண்ட இந்நாட்டில் நடைபெறுகின்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்களின் ஜும்ஆ குத்பாக்களில் பேசுகின்ற நிலையில் இந்தத் தவ்ஹீத்வாதிகளின் நிலை உள்ளது.
தேர்தலில் வாக்களிப்பது ஹராம் என்பதை பல உலமாக்கள் மீண்டும் மீண்டும் இந்த உம்மத்திற்கு நினைவுகாட்டியதன் பின்னாலும் அல்லாஹ்வின் மீதான தவக்குல் என்பது இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்பவர்களாக இந்நாட்டிலுள்ள தவ்ஹீத்வாதிகள் இருக்கின்றனர். இவர்கள் தங்களின் கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் வைத்துக் கொண்டாலும், அப்பெயரைச் சுமந்தவர்களின் நடவடிக்கைகள் குப்ரையும், ஷிர்க்கையும் வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இக்கூட்டங்கள் சொல்கின்ற தவ்ஹீத் என்பது அல்லாஹ்வுக்காகச் சொன்ன தவ்ஹீத் அல்ல. அது அல்லாஹ்வின் மார்க்கத்தினை நிலைநாட்டுவதற்காகச் சொன்ன தவ்ஹீத் அல்ல. இன்னும் இவர்கள் சொல்கின்ற தவ்ஹீத் அல் குர்ஆனும் சுன்னாவும் கூறுகின்ற தவ்ஹீதோ, ஸஹாபாக்களிடம் இருந்த தவ்ஹீதோ அல்ல. மாறாக, தவ்ஹீத் ஜமாஅத் என்ற இக்கூட்டங்கள் கூறுகின்ற தவ்ஹீத் (ஏகத்துவம்) வெறுமனே தங்களின் கூட்டத்திற்கு வைத்துக் கொண்ட ஒரு பெயர் மட்டுமே ஆகும்.