பக்கம் 2
ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?
உலமாக்கள் இவ்வாறு அகீதாவுக்கு முன்னுரிமை அளிக்கும் விஷயத்தில் பல சகோதரர்களும், பல விதமாகக் கேள்விகள் கேட்கின்றனர். அவர்களில் சிலர் இந்த வழிமுறையை கண்டிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதாவது, இவர்களுக்கு எதை எடுத்தாலும் அகீதா என்றும், அஸ்மா வ ஸிபாத் என்றும், அவர் வழிகேடர், இவர் பித்அத்வாதி என்று சொல்வதைத் தவிர, இவர்களுக்கு வேறு ஒன்றும் பேசுவதற்கு இல்லை என்று குறை கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நிச்சயமாக இந்தக் குற்றச்சாட்டுகள் ஸலஃப்களின் பாதையைத் தெரியாதவர்கள் கூறுவது ஆச்சரியமான விஷயம் அல்ல.
அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா தனது அடியார்களை மீண்டும், மீண்டும் தங்களின் தொழுகையில் ஓத வேண்டும் எனக் கடமையாக்கியுள்ள சூரத்துல் பாத்திஹாவில் தன்னைப் புகழ்வதைக் கொண்டு ஆரம்பிக்கிறான்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்,
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
அனைத்துப் புகழும் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது.
الرَّحْمٰنِ الرَّحِيْمِ
உலகில் அனைவருக்கும் அருள் புரிபவன். மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் நிலையாக அன்பு காட்டி அருள் புரிபவன்.
مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
(எங்கள் இரட்சகனே !) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயா.
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக. (அது) உன் கோபத்துக்குள்ளானவர்களான (யூதர்களின்) வழியும் அல்ல. அன்றியும் வழிகேடர்களான (கிறிஸ்தவர்களின்) வழியும் அல்ல.