பக்கம் 1
ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?
ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
இஸ்லாமிய அழைப்புப் பணி என்ற விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த இமாம்களும், ஸலஃப்களின் பாதையை நோக்கி மக்களை அழைப்பதற்கு முன்வருகின்ற சகோதரார்களும் தங்களுடைய அழைப்புப் பணியைச் செய்யும் போது, தங்களுக்கு முன்னால் மார்க்க சட்டதிட்டங்களான பிக்ஹ் விஷயங்களில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையிலும், அந்த பிக்ஹ் விஷயங்களைப் பற்றி அதிகமான விளக்கம் கொடுக்காமலும், அதற்கென்று அதிகமான நேரத்தை ஒதுக்காமலும் அதனை விடவும் அகீதாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தங்களின் வழிமுறையாகக் கையாண்டு வருகிறார்கள்.
அது மட்டுமன்றி அகீதா விஷயங்களில் பல பாடங்கள் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட விஷயங்களை அவர்கள் மீண்டும், மீண்டும் விளக்கிக் கொண்டு இருப்பார்கள்.
அதாவது,
- அல்லாஹ்வின் நம்பிக்கையைப் பற்றியும்,
- அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் விளங்கும் அடிப்படைகளைப் பற்றியும்,
- இன்னும் அப்பெயர்களையும், பண்புகளையும் விளங்கும் விஷயத்தில் ஏற்படுகின்ற வழிகேடான தன்மைகளைப் பற்றியும்,
- அதனால் வழிகேடானவர்களைப் பற்றியும் அடையாளம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
ஸஹாபாக்கள் காலத்திலும், தாபிஈன்களின் காலத்திலும், தபஅ தாபிஈன்களின் காலத்திலும், அதன் பின் வந்த இமாம்களின் காலத்திலும், இன்னும் இன்று வரை வாழுகின்ற உலமாக்களின் காலம் வரை அழைப்புப் பணியில் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பதை ஸலஃப் உலமாக்கள் கையாண்டு வருகிறார்கள். ஸலஃப் உலமாக்கள் தங்கள் வகுப்புகளில் பிக்ஹ் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதற்கென்று விரிவான வகுப்புகளை எடுப்பதற்கு அவர்கள் அதிக நேரத்தை ஒதுக்குவதில்லை.