Skip to content
Part 6 of 6

பக்கம் 6

சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்

புகஹாக்களைப் பொருத்த வரை, அவர்கள் பிக்ஹில் கையாளும் உஸுல் (அடிப்படை) தரமான முடிவை அவர்களுக்குக் காட்டினால் அதுவே அவர்களின் தீர்ப்பாகும். அவர்களின் தீர்ப்பு ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நிலைப்பாட்டிற்கும், ஸஹாபாக்களின் நிலைப்பாட்டிற்கும் தரமாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவர்களின் உஸுலின் அடிப்படை எந்தத் தீர்ப்பைக் கொடுக்கிறதோ அதுவே அவர்களின் தீர்ப்பாக அமையும். ஆனால் இதில் அஹ்லுல் ஹதீஸி வல் அதர்  اهل الحديث والعثر றஸுலுல்லாஹ்வினதும், ஸஹாபாக்களினதும் அடிச்சுவட்டைக் கவனித்தே செயற்படுவார்கள்.

புகஹாக்கள் மேலே கூறப்பட்ட இரு ஹதீஸ்களையும் சேர்த்து விளங்கி, இரண்டு ஹதீஸ்களையும் கொண்டு செயற்படுவதற்காக வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள சட்டத்தை சனிக் கிழமைக்கு அமைத்தார்கள். அதாவது, சனிக் கிழமை நோன்பு வைக்கும் ஹதீஸுக்கு விளக்கமாக சனிக் கிழமை மட்டும் நோன்பு நோற்பதுவே தடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள சட்டத்தை சனிக் கிழமையில் நோன்பு நோற்கும் சட்டமாக அமைத்து விட்டார்கள்.  அதன் விளைவாக சனிக் கிழமை நோன்பு வைப்பதானால் வெள்ளிக் கிழமையோடு சேர்த்து நோற்றால் குற்றமில்லை என புகஹாக்கள் தீர்ப்புக் கூறி விட்டார்கள்.

இந்த அடிப்படையை இன்றும் கூட ஹதீஸ் கல்வியின் அறிஞர்கள் சுமக்கிறார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக இந்த விஷயத்தில் ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் حفظه الله அவர்களுக்கும், ஷெய்க் நாஸிருத்தீன் அல் அல்பானி رحمه الله அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறலாம். இதில் ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் حفظه الله அவர்கள் சற்று மேலே நாம் குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்ததால் ஷெய்க் அல்பானி رحمه الله அவர்கள் இந்த விஷயத்தில் புகஹாக்கள் கொண்டிருந்த தவறான தீர்ப்பை தெளிவாக நிரூபித்துக் காட்டினார்கள்.

உஸுலுல் ஹதீஸின் அடிப்படையில் (ஹதீஸின் அடிப்படையில் தீர்ப்புக் காணும் அடிப்படையில்) புகஹாக்களின் அந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. உஸுலுல் ஹதீஸின் அடிப்படையைப் பின்பற்றுபவர்கள் ஹதீஸின் தீர்ப்பை முன்வைப்பதே சரியானதாகும். இதுவே புகஹாக்களுக்கும், முஹத்திஸீன்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகும். முஹத்திஸீன்கள் எத்தீர்ப்பை முன்வைத்தாலும் அதற்கு அவர்கள் நேரடியே ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கிறார்கள். ஆனால் புகஹாக்கள் நேரடியே ஆதாரத்தைக் கூறி தீர்ப்புக் கூறாமல் சுற்றி வலைத்து தீர்ப்புக் கூறும் வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். இது தவறான போக்காகும். இவ்வழிமுறையைப் பின்பற்றுவதால் ஹதீஸுக்கு முரணான தீர்ப்பு உருவாகிறது.

மார்க்க சட்டங்களை விளங்குவதில் முக்கியமானதொரு அம்சம் என்னவென்றால், வந்த அறிவிப்பை அது வந்த மாதிரியே விளங்குதல் வேண்டும். அதாவது, ஹதீஸின் வார்த்தை எதனைக் கூறுகிறது என்பதை விளங்க வேண்டும். ஹதீஸின் வார்த்தையில் வந்தது மட்டுமே அதன் சட்டமாகும். ஒரு ஹதீஸின் சட்டத்தை மற்றுமொரு ஹதீஸுக்கு அமைப்பது, அல்லது ஒரு ஹதீஸுக்கு அதன் சட்டத்தோடு சம்பந்தமல்லாத மற்றுமொரு ஹதீஸின் சட்டத்தை அமல் செய்வது போன்ற அனைத்து வழிமுறைகளும் தவறாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் ஒரு காரியத்தில் தீர்ப்பளித்த தீர்ப்புக்கு மேலாக வேறு எவருடைய தீர்ப்பும் அதிகாரம் செழுத்த முடியாது. இன்னும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களின் தீர்ப்பு வந்த பின்னால் எவருடைய ஆராய்ச்சிக்கும் இடமளிக்க முடியாது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்