பக்கம் 4
சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்
இப்போது மேற்கூறிப்பிட்ட இரண்டு ஹதீஸில் உள்ள சட்டத்தை பாா்போம்.
முதலாவது ஹதீஸில் உள்ள சட்டம்
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم . حسنه الترمذي
நீங்கள் சனிக் கிழமைகளில் நோன்பு நோற்க வேண்டாம். அது உங்களுக்கு பர்ளானதாக இருந்தாலே தவிர.
இந்த ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தைகளைக் கவனித்தால, பின்வரும் இரு சட்டங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.
- சனிக் கிழமைகளில் பர்ளான நோன்புகளை நோற்பது அனுமதிக்கப்பட்டது
- சனிக் கிழமைகளில் பர்ள் அல்லாத நோன்புகள் நோற்பது தடுக்கப்பட்டுள்ளது
இரண்டாவது ஹதீஸில் உள்ள சட்டம்
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
(لا يصومن أحدكم يوم الجمعة إلا يوماً قبله أو بعده (متفق عليه من حديث أبي هريرة
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமை நோன்பு நோற்க வேண்டாம். அதற்கு முதல் நாளுடன் அல்லது அதன் பின்னால் வரும் நாளுடனேயே தவிர.
இந்த ஹதீஸில் உள்ள சட்டங்கள்
- (பர்ளு, நஃபில் ஆகிய) எந்தவொரு நோன்பையும் வெள்ளிக் கிழமையில் மாத்திரம் நோற்க முடியாது.
- வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்பதாக இருந்தால் வியாழக் கிழமையோடு அல்லது சனிக் கிழமையோடு சேர்த்தே நோற்க வேண்டும்.