பக்கம் 3
சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்
சனிக் கிழமை நோன்பு நோற்பது பற்றிய சட்டம் என்ன ?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم . حسنه الترمذي
நீங்கள் சனிக் கிழமைகளில் நோன்பு நோற்க வேண்டாம். அது உங்களுக்கு பர்ளானதாக இருந்தாலே தவிர.
இந்த ஹதீஸை சிலர் எடுக்க மாட்டார்கள். அவர்கள் இந்த ஹதீஸுக்கு முரணாக மற்றுமொரு ஹதீஸை அமைத்துக் கொண்டார்கள். அந்த ஹதீஸ் வருமாறு,
(لا يصومن أحدكم يوم الجمعة إلا يوماً قبله أو بعده (متفق عليه من حديث أبي هريرة
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமை நோன்பு நோற்க வேண்டாம். அதற்கு முதல் நாளுடன் அல்லது அதன் பின்னால் வரும் நாளுடனேயே தவிர.
இவ்விரு ஹதீஸ்களையும் முரணாகக் காண்பவர்கள் ஒரு ஹதீஸை எடுத்துக் கொண்டு மற்றைய ஹதீஸைத் தட்டிவிடுகிறார்கள். ஒரு ஹதீஸை எடுத்தால் மற்றைய ஹதீஸை எடுக்க முடியாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. அப்படியானால், ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒன்றுக்கொன்று முரணாகப் பேசிவிட்டார்கள் என்று அவர்கள் கூற வருகிறார்களா?
நாங்கள் அவ்விரு ஹதீஸ்களையும் எடுக்கிறோம். அத்துடன் அவ்விரு ஹதீஸ்களையும் கொண்டு அமலும் செய்கிறோம். அதாவது, அவ்விரு ஹதீஸ்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை. அத்துடன் அவற்றைக் கொண்டு செயற்படுவதிலும் சிக்கல் இல்லை. ஏன் என்றால், இரண்டு ஹதீஸ்களும் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்தே வந்துள்ளன.
அல்லாஹு தஆலா அவனது தூதர் எதனையெல்லாம் தந்தாரோ அதனை எடுத்துக் கொள்ளுமாறு ஏவியதன் அடிப்படையில், அவர்களின் இரு ஹதீஸ்களையும் நாம் எடுத்து செயற்படுவதே நமது கடமையாகும். ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தந்தவற்ற அனைத்தையும் எடுக்க வேண்டிய நாம் எவ்வாறு அதில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட முடியும்? எடுக்கும் விஷயத்தை எவ்வாறு கவனமாக எடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொண்டால் எடுத்துக் கொண்டது எம்மிடத்தில் தரமாக இருக்கும்.
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் ஸஹாபாக்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்து, நாமும் அவ்வாறே எடுத்துக் கொண்டால் மேற்கூறிய இரு ஹதீஸ்களைக் கொண்டும் செயல்படுபவர்களாக இருக்கலாம்.