பக்கம் 2
சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்
கல்வி கற்பதில் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையைத் தவிர்ந்து கொண்டவர்களினால் மார்க்கக் கல்வியிலும், அதன் விளக்கத்திலும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அவற்றில் சில,
- மார்க்கத்தை சுய இலாபங்களுக்காக விட்டுக் கொடுப்பது
- ஹதீஸ்களுக்கு மாற்றுக் கருத்துக் கொடுத்தாலும் அது குற்றமில்லை எனக் கருதுவது
- ஒரு ஹதீஸ் மற்றுமொரு ஹதீஸுக்கு முரணாக உள்ளதென்று கருதுவது குற்றமில்லை என நினைப்பது
இப்பண்புகள் ஸஹாபாக்களிடமோ, ஸஹாபாக்களைப் பின்பற்றியவர்களிடமோ இருக்கவில்லை. ஏன் என்றால், அவர்கள் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா்களின் நிலையைப் பற்றி அல்லாஹ்வின் ஏவலை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்,
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا
தூதர் எதை உங்களுக்குத் தருகிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அவா் எதனை விட்டும் விலக்குகிறாறோ அதனை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 59:07)
அல்லாஹ் சுபஹானத்தாஆலா அவனது அடியார்களை நோக்கி அவனது தூதர் கொடுப்பதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏவினால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியவை, வழிகாட்டியவை, ஏவியவை அனைத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு ஹதீஸை எடுத்துக் கொண்டு மற்றுமொரு ஹதீஸை நாம் தட்டிவிட முடியாது. அவ்வாறு ஒரு ஹதீஸைக் கொண்டு செயல்படுவதற்காக மற்றுமொரு ஹதீஸைத் தட்டுவது என்றால் மேலே கூறப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாக நடந்து, ஒரு ஹதீஸை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற ஹதீஸை விட்டும் விலகிக் கொள்வதாகவே கருதப்படும்.
அல்லாஹ் சுபஹானத்தாஆலா அவனது தூதர் எதை உங்களுக்குத் தருகிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏவியிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொடுத்ததை எடுக்காமல் அதனை விட்டும் விலகிக் கொள்வதன் முக்கிய காரணம், தாங்களங எடுத்த கொண்ட ஹதீஸில் தங்களின் விளக்கத்தைப் புகுத்தியதுதான். ஆனால் சரியான கருத்தில் இருந்தால் ரஸுலுல்லாஹ் கொடுக்கின்ற அனைத்தையும் பெறும் தன்மை இருக்கும்.