Skip to content
Part 6 of 6

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை

ஸஈத் இப்னு ஸுவைத் றஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது

عن سعيد بن سويد قال : (( صلى بنا معاوية الجمعة ضحى )) ، رواه ابن أبي شيبة عن عمرو بن مرة عنه .

முஆவியா எங்களுக்கு லுஹா நேரத்தில் ஜும்ஆ தொழுவித்தார். (இப்னு அபீ ஷைபா)

قلت : وسعيد هذا لم يذكروا له راوياً غير عمرو هذا ، ومع ذلك ذكره ابن حبان في 'الثقات’ (4ஃ280)

ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :

மேற்கூறப்பட்ட அறிவிப்பின் அறிவிப்பாளரான ஸஈதைப் பற்றி அவரது தரம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும், இப்னு ஹிப்பான் அவரது திகாத் (நம்பிக்கைக்குரியவர்) என்ற நூலில் அவரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிலால் இப்னு அப்ஸி றஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது

عن بلال العبسي : (( أن عماراً صلى بالناس الجمعة ، والناس فريقان : بعضهم يقول : زالت الشمس ، وبعضهم يقول : لم تزل )) ، رواه ابن أبي شيبة بسند صحيح

அம்மார் மக்களுக்கு ஜும்ஆ தொழுவித்தார். மக்கள் இரு சாராராக இருந்தார்கள். ஒரு சாரார் சூரியன் உச்சியை அடைந்து விட்டது எனக் கூற, இன்னுமொரு சாரார் சூரியன் உச்சிக்கு வரவில்லை எனக் கூறினார்கள் (இப்னு அபீ ஷைபா - ஸஹீஹ் ஸனதோடு அறிவித்தார்)

அபீ ரஸீன் றஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது

عن أبي رزين قال : (( كنا نصلي مع علي الجمعة ، فأحياناً نجد فيئاً ، وأحياناً لا نجده )) ، رواه ابن أبي شيبة وإسناده صحيح على شرط مسلم

நாங்கள் அலி றழியல்லாஹு அன்ஹு உடன் ஜும்ஆ தொழுவோம். சில சமயங்களில் எங்களுக்கு நிழல் கிடைக்கும். சில சமயங்களில் நிழல் கிடைப்பதில்லை. (இப்னு அபீ ஷைபா – இதன் ஸனத் இமாம் முஸ்லிமின் நிபந்தனையில் ஸஹீஹாக அமைகிறது)

ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :

قلت : وهذا يدل لمشروعية الأمرين ، الصلاة قبل الزوال ، والصلاة بعده ، كما هو ظاهر

 ولهذه الأحاديث والآثار كان الإمام أحمد رحمه الله يذهب إلى جواز صلاة الجمعة قبل الزوال كما سبق ، وهو الحق كما قال الشوكاني وغيره ، وتفصيل القول في هذه المسألة لا تحتمله هذه العجالة ، فلتراجع في المطولات كـ 'نيل الأوطار’ ، و 'السيل الجرار’ (1ஃ296–297) ، وغيره

'இதுவரை கூறப்பட்ட ஆதாரங்கள், (ஜும்ஆவின்) தொழுகை சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னாலும் உச்சியை அடைந்த பின்னாலும் தொழுவது ஷரீஅத் ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது தெளிவாக உள்ளது.

இந்த ஹதீஸ்கள் மற்றும் ஆதார்களின் அடிப்படையில்தான் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுவது அனுமதிக்கப்பட்டது என்ற முடிவை இமாம் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் கொண்டிருந்தார்கள். உண்மையும் அதுதான். இந்த விடயத்தை இங்கு விரிவாக சொல்வதற்கு வாய்ப்பில்லை. இது பற்றி விரிவாகப் பார்க்க விரும்புபவர்கள் இமாம் முஹம்மது அலி ஷவ்கானி றஹிமஹுல்லாஹ் எழுதிய 'நய்லுல் அவ்தார்’ نيل الأوطار என்ற நூலைப் பார்க்கலாம்’