Skip to content
Part 5 of 6

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை

சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை

ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :

قلت : ورجاله ثقات غير عبد الله بن سلمة ، قال الحافظ في 'الفتح’ : (( صدوق ؛ إلا أنه ممن تغير لما كبر )) .

  قلت : ومثله إنما يخشى منه الخطأ في رفع الحديث ، أو في روايته عن غيره ، مما لم يشاهد ، وهو هنا يروي حادثة شاهدها بنفسه ، وهي في الواقع غريبة لمخالفتها للمعهود من الصلاة بعد الزوال ، فاجتماع هذه الأمور ؛ مما يرجح حفظه لما شاهد ، فالأرجح أن هذا الأثر صحيح ، ولعله من أجل ما ذكرنا احتج به الإمام أحمد ، فقال ابنه عبد الله في 'مسائله عنه’ (ص112) :

(( سئل عن وقت صلاة الجمعة ؟ قال : إن صلى قبل الزوال فلا بأس ، حديث عمرو بن مرة عن عبد الله بن سلمة أن عبد الله صلى بـهم يوم الجمعة ضحى

இந்த அறிவிப்பில் அப்துல்லாஹ் இப்னு ஸலமாவைத் தவிர ஏனைய அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலமாவைப் பற்றி இப்னு ஹஜர் அவரது பத்ஹுல் பாரி என்ற நூலில் கூறுகையில் : அவர் உண்மையானவர், ஆனால் அவர் முதிய வயதை அடைந்த போது மனனத்தில் குறைபாடுள்ளவராக இருந்தார் எனக் கூறினார்கள்.

இவ்வாறான தன்மையுள்ள அறிவிப்பாளரிடத்தில் அஞ்சப்படும் விடயம் என்னவெனில், அவர் இன்னுமொருவரிடமிருந்து பெற்ற அறிவிப்பை அறிவிப்பதில்தான். (ஆனால் இங்கு அப்துல்லாஹ் இப்னு ஸலமா இன்னுமொருவரிடமிருந்து இதனை அறிவிக்கவில்லை) மாறாக அவர் அவரது வாழ்வில் நேரடியே கண்டதையே அறிவிக்கிறார்.

நடைமுறையை கருத்தில் கொள்ளும் போது சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின்னால் வழக்கமாக (ஜும்ஆவின்) தொழுகை நடைபெறுவதால் இவ்வறிவிப்பு நடைமுறைக்கு முரணாகத் தெரிகிறது. இங்கு அனைத்தையும் ஆராய்கையில் இந்த விடயத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமாவின் மனனம் சரியானதாகும். இதில் சரியான முடிவு, இந்த அறிவிப்பு ஸஹீஹ் என்பதாகும். இதன் காரணமாகவே இமாம் அஹ்மத் அவரது கருத்துக்கு மேற்கூறிய அறிவிப்பை ஆதாரமாகக் கூறினார்.

அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அவரது தந்தையான இமாம் அஹ்மதிடம் ஜும்ஆ தொழுகையின் நேரத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு இமாம் அஹ்மத் : சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால் தொழுவதில் குறையில்லை எனக் கூறினார். அதற்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு ஸலமாவிடமிருந்து அம்ர் இப்னு முர்ரா அறிவிப்பதாக, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் எங்களுக்கு லுஹா நேரத்தில் ஜும்ஆ தொழுவித்தார்கள்’ என்ற அறிவிப்பை கூறினார். இன்னும் பின்வரும் ஹதீஸையும் கூறினார்.

ஸஹ்ல் இப்னு ஸஅத் றழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது

وحديث سهل بن سعد : كنا نصلي ونتغدى بعد الجمعة ، كأنه يدل على أنه قبل الزوال

நாங்கள் (ஜும்ஆ) தொழுதோம். ஜும்ஆவுக்குப் பின்னால் (غدى உணவை சாப்பிட்டோம்).

ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :

இந்த அறிவிப்பு சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால் ஜும்ஆ இடம்பெற்றதைக் காட்டுகிறது

ஷெய்க் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி ஹபிழஹுல்லாஹ் கூறினார் : غدى - ஃகதா - என்பது சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால் உண்ணும் உணவாகும்.