சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :
قلت : وإسناده محتمل للتحسين ، بل هو حسن على طريقة بعض العلماء كابن رجب وغيره ، فإن رجاله ثقات غير عبد الله بن سيدان ، قال الحافظ في 'الفتح’ (2ஃ321) : (( تابعي كبير ، إلا أنه غير معروف العدالة )) .
قلت : قد روى عنه أربعة من الثقات ، وهم ثابت بن الحجاج ، وجعفر ابن برقان ؛ كما في 'الجرح والتعديل’ (2ஃ2ஃ68) ، وميمون بن مهران ، وحبيب ابن أبي مرزوق كما في 'ثقات ابن حبان’ (5ஃ31 –32).
وقول الحافظ بعد أن ساق له هذا الأثر : (( وقال البخاري : لا يتابع على حديثه ، بل عارضه ما هو أقوى منه )) ، ثم ذكر آثاراً صحيحة عن أبي بكر و عمر في التجميع بعد الزوال .
فأقول : لا تعارض بينها وبين هذا الأثر كما لا تعارض بين الأحاديث الموافقة له ، وبين الأحاديث الموافقة لها ، فالصحابة تلقوا الأمرين عن رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فكانوا – مثله عليه السلام – يفعلون هذا تارة ، وتارة هذا
மேற்கூறிய அறிவிப்பின் ஸனத் ஹஸன் என்ற தரத்தில் அமைவதற்கு வாய்ப்புள்ள ஸனதாகும். இதன் ஸனத் இப்னு ரஜப் மற்றும் ஏனைய உலமாக்களின் வழிகாட்டலில் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு ஸய்தானைத் தவிர ஏனையவர்கள் தரமாக இருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸய்தான் மூத்த தாபிஈன்களில் ஒருவர் என அறியப்பட்டிருந்தாலும் அவரது நீதித் தன்மை அறியப்படவில்லை. இருப்பினும், அப்துல்லாஹ் இப்னு ஸய்தானிடமிருந்து நம்பிக்கைக்குரிய நான்கு அறிவிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தாபித் இப்னு ஹஜ்ஜாஜ், ஜஅபர் இப்னு புர்கான், மைமூன் இப்னு மிஹ்ரான், ஹபீப் இப்னு அபீ மர்ஸுக் ஆகிய நான்கு நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸய்தானிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ் கூறுகிறார் :
ஜரஹ் வத் தஃதீலில் கையாளப்படும் அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு அறிவிப்பாளரிடமிருந்து நம்பிக்கைக்குரிய நான்கு பேர் அறிவிக்கும் போது அந்த அறிவிப்பாளரை நாம் சந்தேகப்படத் தேவையில்லை
ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் தொடர்ந்து கூறுகிறார் :
இந்த அறிவிப்புகளைக் குறித்து இமாம் புஹாரி றஹிமஹுல்லாஹ் கூறினார் : 'நாம் இந்த அதரை (அடிச்சுவட்டை) எடுத்துப் பின்பற்ற முடியாது, இதற்கு முரணாக உள்ள ஆதாரங்கள் உறுதியானவையாக உள்ளன. ஏனென்றால், அபூ பக்கரும் உமரும் சூரியன் உச்சியை அடைந்த பின்னர் தொழுததாக அறிவித்துள்ளார்கள்’
(புஹாரி றஹிமஹுல்லாஹ் கூறுவது போல்) இந்த அறிவிப்புகளுக்கும் அந்த அறிவிப்புகளுக்கும் முரண்பாடு இல்லை. (அதாவது, சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால் தொழுததாக வந்துள்ள ஹதீஸுக்கும் உச்சியை அடைந்த பின்னால் தொழுததாக வந்துள்ள ஹதீஸுக்கும் முரண்பாடு இல்லை).
சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால் தொழுவதையும் உச்சியை அடைந்த பின்னால் தொழுவதையும் ஸஹாபாக்கள் றஸுலுல்லாஹ்விடமிருந்துதான் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் றஸுலுல்லாஹ்வின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதற்காக சில சமயங்களில் அப்படியும் சில சமயங்களில் இப்படியும் செய்வார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலமா றஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது
عن عبد الله بن سلمة قال : (( صلى بنا عبد الله الجمعة ضحى، وقال خشيت عليكم الحر )) أخرجه ابن أبي شيبة .
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு எங்களுக்கு லுஹா நேரத்தில் ஜும்ஆ தொழுவித்தார்கள். 'கடுமையான வெப்பத்தை உங்களுக்கு நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள் (இப்னு அபீ ஷைபா)