சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
فإذا تذكرنا هذا ؛ علمنا أن الأذان كان قبل الزوال حتماً ، وكذا الخطبة ، طالما أن الصلاة كانت حين الزوال ، وهذا بيّن لا يخفى والحمد لله .وأصرح من هذه الأحاديث في الدلالة على المطلوب حديث جابر الآخر ، وهو :
இவ்வறிவிப்புகளை நாம் நினைவில் கொள்கின்ற போது இவ்வறிவிப்புகளின் அடிப்படையில் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் அதான் சொல்லப்பட்டிருக்கிறது, இன்னும் குத்பாவும் இடம்பெற்றிருக்கிறது.
சூரியன் உச்சியிலிருந்து சாயும் போது தொழுகை இடம்பெற்றதென்றால் அதற்கு முன்னால் அதானும், குத்பாவும் இடம்பெற்றிருக்கின்றன. இவை தெளிவாக இருக்கின்றன. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
இதனை விடவும் நேரடியாகவும் தெளிவாகவும் ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் அமைந்திருக்கிறது.
ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
وعنه قال : (( كان رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يصلي الجمعة ، ثم نذهب إلى جمالنا ، فنريحها حين تزول الشمس ، يعني : النواضح )) ، أخرجه مسلم (3ஃ 8 – 9)، والنسائي (1ஃ206) ، والبيهقي (3ஃ190) ، وأحمد (3ஃ331) ، وابن أبي شيبة في 'المصنف’ (1ஃ207ஃ1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுவித்தார்கள். அதன் பின்னால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அவைகளை சூரியன் உச்சியிலிருந்து சாயும் வேளையில் அவிழ்த்து விடுவோம். (முஸ்லிம், நஸாஈ, பைஹகி, அஹ்மத் முஸன்னப் இப்னு அபீ ஷைபா)
ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :
فهذا صريح في أن الصلاة كانت قبل الزوال ، فكيف بالخطبة ؟ فكيف بالأذان ؟ ويشهد لذلك آثار من عمل الصحابة ، نذكر بعضها للاستشهاد بـها
இந்த அறிவிப்பு சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால் தொழுது விட்டார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறெனில், குத்பாவினதும் அதானினதும் நிலை எப்படியானது? (அதாவது, குத்பாவும், அதானும் சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னால்தான் இடம்பெற்றிருக்கிறது)
இதற்கு ஸஹாபாக்களின் அடிச்சுவடுகளும் சாட்சிகளாக இருக்கின்றன. அதில் சிலவற்றை சாட்சிகளாக நான் இங்கே முன்வைக்கிறேன்.
அப்துல்லாஹ் இப்னு ஸய்தான் அஸ்ஸுலமி றஹிமஹுல்லாஹ் கூறுவதாவது
عن عبد الله بن سيدان السلمي قال : (( شهدت الجمعة مع أبي بكر الصديق ، فكانت خطبته وصلاته قبل نصف النهار ، ثم شهدنا مع عمر ، فكانت خطبته وصلاته إلى أن أقول : انتصف النهار ، ثم شهدنا مع عثمان ، فكانت خطبته وصلاته إلى أن أقول زال النهار ، فما رأيت أحداً عاب ذلك و لا أنكره )) ، رواه ابن أبي شيبة (1ஃ206ஃ2) ، والدارقطني (169)
நான் அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு உடன் ஜும்ஆ தொழுததிற்கு சாட்சி பகர்கிறேன். அவரது குத்பாவும் தொழுகையும் பகலின் அரைவாசிக்கு முன்னால் நடைபெற்றது. அதன் பின்னால் நான் உமர் றழியல்லாஹு அன்ஹு உடன் தொழுததிற்கு சாட்சி பகர்கிறேன். அவரது குத்பாவும் தொழுகையும் பகலின் அரைவாசியை அடையும் போது நடைபெற்றது. அதன் பின்னால் உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு உடன் தொழுததிற்கு நான் சாட்சி பகர்கிறேன். அவரது குத்பாவும் தொழுகையும் பகல் நேரம் முடியும் வேளையில் நடைபெற்றது. எங்களில் எவரும் இதில் குறை காணவோ ஆட்சேபிக்கவோ இல்லை. (இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி)