சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார் :
عن جابر رضي الله عنه : (( كان رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا زالت الشمس صلى الجمعة )) ، رواه الطبراني في 'الأوسط’ وإسناده حسن .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் போது ஜும்ஆ தொழுகையைத் தொழுவார்கள். (தபரானி - அவ்ஸத்)
ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :
وهذه الأحاديث ظاهرة الدلالة على ما ذكرنا ، وذلك أنه من المعلوم أنه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يخطب قبل الصلاة خطبتين يقرأ فيهما القرآن ويذكّر الناس ، حتى كان أحياناً يقرأ فيها ) ق.والقرآن المجيد( ، ففي 'صحيح مسلم’
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுவது அனுமதிக்கப்பட்டது என்பதற்கு மேலே காட்டப்பட்ட ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. ஏனென்றால் தொழுகைக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு குத்பாக்கள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்த அம்சமாகும்.
மேலே கூறப்பட்ட ஹதீஸ்களில் சூரியன் உச்சியிலிருந்து சாயும் போது தொழுததாகக் கூறப்பட்டடிருப்பதனால் இரண்டு குத்பாக்களையும் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது.
அந்த குத்பாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். சில சமயங்களில் நபிகளார் ஜும்ஆவில் காஃப் என்ற சூறாவையும் ஓதுவார்கள் என்ற அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது.
உம்மு ஹிஷாம் பின்த் ஹாரித் றழியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் ஹதீஸ்
عن أم هشام بنت حارثة بن النعمان قالت : (( ما أخذت ) ق . والقرآن المجيد( إلا من لسان رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يقرأها كل يوم جمعة على المنبر إذا خطب الناس )).
நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து காஃப் சூறாவை, அன்னார் மிம்பரிலிருந்து மக்களுக்கு ஓதிக் காட்டும் வேளையிலேயே தவிர பெற்றுக் கொள்ளவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)
ஷெய்க் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :
وصح عنه أنه قرأ فيها سورة براءة .رواه ابن خزيمة في 'صحيحه’ والحاكم وصححه ، ووافقه الذهبي وغيره .
இன்னும் சில அறிவிப்புகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூறதுல் பராஅ (சூறா தவ்பா) ஓதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா - இமாம் ஹாகிம் இந்த அறிவிப்பை ஸஹீஹ் எனக் கருதுகிறார். இமாம் தஹபியும் ஏனையவர்களும் ஸஹீஹ் என்பதை ஏற்றுக் கொண்டார்கள்)