சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி ஹபிழஹுல்லாஹ் இரு நேரங்களில் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றுதல் பற்றி தொகுத்த 'صلاة الجمعة قبل الزوال و بعده' -'சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னாலும் பின்னாலும் ஜும்ஆ தொழுதல்' என்ற நூலின் ஒரு பகுதி.
அஷ்ஷெய்க் அபூ அப்துர்ரஹ்மான் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் வின் நூல் அல் அஜ்விபதுந் நாபியா
(அஷ்ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் தனது நூலில் இரு நேரங்களில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது பற்றிய பாடத்தில் பின்வரும் ஹதீஸ்களை முன்வைத்து, ஆதாரங்களின் அடிப்படையில் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னாலும் ஜும்ஆவை நிறைவேற்றலாம் என்பதை நிரூபிக்கிறார்)
ஸலமத் இப்னு அக்வா றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார் :
عن سلمة بن الأكوع قال : (( كنا نجمع مع رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا زالت الشمس ، ثم نرجع نتتبع الفيء )) .أخرجه البخاري ، ومسلم ، وغيرهما ، وابن أبي شيبة في ‘المصنف’
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சூரியன் உச்சியிலிருந்து சாயும் போது ஜும்ஆவைத் தொழுவோம். அதன் பின் நாங்கள் நிழலைத் தேடிச் செல்வோம்.
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ் கூறுகிறார் : இன்னும் சில அறிவிப்புகளில், எங்களுக்கு நிழல் கிடைக்காமல் அப்போது இருக்கும் நிழலில் சமாளித்துக் கொள்ள முயல்வோம் என வந்துள்ளது
அனஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார் :
عن أنس :(( أن رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يصلي الجمعة حين تميل الشمس )) ، رواه البخاري وغيره.
சூரியன் உச்சியிலிருந்து சாயும் வேளையில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுகையைத் தொழுவார்கள் (ஸஹீஹுல் புஹாரி)