பக்கம் 3
வானவியல் அடிப்படையில் கிரகண தொழுகையின் நேரத்தை முன்னரே முடிவு செய்வது நபிவழிக்கு முரணாகும்
அல்லாஹ் தக்தீர் (நிர்ணயம்) செய்தான் என்பது அல்லாஹ்வுடைய செயலாகும். அது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறை முகமான கல்வி (இல்முல் கைப்) ஆகும். அல்லாஹ் அவனுடைய செயல்பாடுகளில் தனித்துவமானவன் என்பது தவ்ஹீதின் அடிப்படையாகும். இதனை நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். சூரியனும் சந்திரனும் நிற்கும் இடங்களை தக்தீர் ( நிர்ணயம்) செய்ததில் அல்லாஹ் தனித்துவமானவன் ஆவான். இது தான் அல்லாஹ்வை அவனுடைய செயற்பாடுகளில் ஏகத்துவப்படுத்துவதாகும். அல்லாஹ் நிர்ணயம் செய்த தங்குமிடங்களை வஹி (அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்) மூலமாக அல்லாஹ் அறிவித்திருந்தால் தான் மனிதர்களால் அறிய முடியும்.
இதனை தவிர அல்லாஹ் நிர்ணயம் செய்த இடங்களை (வானவியல்) வேறு வழிமுறையில் யாராலும் அறிய முடியாது. அல்லாஹ்வுடைய தக்தீர் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறை முகமான கல்வி (இல்முல் கைப்) ஆகும். எனவே இதனை மனிதர்கள் வானவியல் கல்வியின் மூலமாக கண்டு பிடித்துவிடுவோம் என்று கூறுவது மடமையும், மிக பெரிய இறை நிராகரிப்புமாகும்.
தவ்ஹீதை அறியாதவர்களால் இது இறை நிராகரிப்பு என்பதை விளங்க முடியாது. அல்லாஹ் இவ்வாறான வழிகேடான வழிமுறையில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும்.