பக்கம் 2
வானவியல் அடிப்படையில் கிரகண தொழுகையின் நேரத்தை முன்னரே முடிவு செய்வது நபிவழிக்கு முரணாகும்
மனிதர்களிடத்தில் உங்களுக்கு எதிர் காலத்தில் இவ்வாறு தான் நடக்கும் என்று கூறுவது அல்லாஹ்வுடைய தக்தீர் (அல்லாஹ் நிர்ணயம் செய்ததை கூறுவது) ஆகும். அவ்வாறு கூறுவது குஃப்ராகும் ஆகும். அதேபோன்று தான் நட்சத்திரங்கள், கோள்கள் இவ்வாறு தான் நிற்கும், இவ்வாறு தான் நகரும்; என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வுடைய தக்தீரை (அல்லாஹ் நிர்ணயம் செய்ததை கூறுவததைப்) பற்றி பேசுகின்றார். இவ்வாறு பேசுவது சூனியத்தின் ஒரு பகுதியாகும். சூனியத்தின் தீர்ப்பு குஃப்ராகும். எனவே வானவியல் மூலம் கிரகணங்கள் ஏற்படுவதை முன்னரே அறிந்து அதன் நேரத்தை முன்னரே முடிவு செய்து தொழுவது நபிவழிக்கு முரணாகும். மேலும் அவ்வாறு செய்வது பித்அதாகும். பித்அத்கள் அனைத்தும் வழிகேடாகும்.
வானவியலும் இறை நிராகரிப்பும்
அல்லாஹ் அவனுடைய அல்-குர்ஆனில் கூறுகிறான்
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ
அவன் எத்தகையவனென்றால் சூரியனை மின்னும் ஒளிமிகுந்ததாகவும், சந்திரனை (வெளிச்சந்தரக்கூடிய) பிரகாசமாகவும் ஆக்கினான். சூரியன் சந்திரனுடைய தங்குமிடங்களை அல்லாஹ் தான் நிர்ணயம் செய்தான். (10:5)
“ مَنَازِلَ மனாசில்” - நிற்கும் இடங்கள்.
சந்திரன், சூரியன் எந்த இடத்தில் நிற்கும் என்பதை அல்லாஹ் தான் (தக்தீர்) நிர்ணயம் செய்தான் என்று அவனுடைய அல்-குர்ஆனிலே நமக்கு எடுத்துக் காட்டுகின்றான். எனவே சூரியனும் சந்திரனும் இந்த இடத்தில் தான் நிற்கும் என்று யாராலும் கூற முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நிர்ணயம் செய்ததை மனிதன் உருவாக்கிய கல்வியின் மூலமாக கூறுவது, அவர்கள் அல்லாஹ் மட்டுமே அறிந்த விஷயத்தில் தங்களை முற்படுத்திக் கொண்டார்கள். இது மிகவும் ஆபத்தானதாகும்.