Skip to content
Part 1 of 3

பக்கம் 1

வானவியல் அடிப்படையில் கிரகண தொழுகையின் நேரத்தை முன்னரே முடிவு செய்வது நபிவழிக்கு முரணாகும்

வானவியல் அடிப்படையில் கிரகண தொழுகையின் நேரத்தை முன்னரே முடிவு செய்வது நபிவழிக்கு முரணாகும்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

 

நபி (صلى الله عليه و سلم) அவர்கள் கூறினார்கள்

فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا

நீங்கள் கிரகணங்களைக் பார்த்தால் தொழுங்கள். (ஸஹீஹ் அல்-புகாரி : 1040)

எனவே கிரகணங்கள் ஏற்படுவதை கண்களினால் பார்த்து தொழுவது தான் நபி வழியாகும். அல்லாஹ்வின் நல்லடியார்களே! கிரகணங்கள் ஏற்படுவதை பார்க்கும் பொழுது தான் தொழ வேண்டும். மாறாக வானவியல் கல்வியின் மூலமாக சூரியனும் சந்திரனும் இவ்வாறு நகரும், மேலும் கிரகணங்கள் இந்த குறிப்பிட்ட நாளில் இவ்வளவு நேரம் ஏற்படும் என்று முன்அறிவிப்பு செய்வது தவறும் குஃப்ரும் ஆகும்.

قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏‏ مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ

நபி (صلى الله عليه و سلم) அவர்கள் கூறினார்கள்

யார் நட்சத்திர விஷயத்தில் பேசிவிட்டாரோ அவர் தன்னை சூனியத்தின் ஒரு பகுதியில் சம்பந்தமாக்கி விட்டார். (சுனன் இப்னுமாஜா).

ஷெய்க் அல்பானி (رحمه الله) அவர்கள் இதனை ஆதரப்பூர்வமானது என்று தீர்ப்பளித்துள்ளார்கள். மேலும் இமாம் முஸ்லிம் (رحمه الله) அவர்களின் நிபந்தனைக்கு உட்பட்ட ஸஹீஹான ஹதீஸாகும்.

‘النُّجُومِ - நுஜூம்'

என்றால் பூமிக்கு வெளியே உள்ள அனைத்தையும் அதாவது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றை குறிப்பதற்கு பயன்படுத்தும் சொல்லாகும். இவ்வாறு அல்லாஹ் நிர்ணயம் செய்த அதனுடைய சுழ்ற்றியைப் பற்றி பேசுவது சூனியத்தின் ஒரு பகுதி ஆகும் என நபி (صلى الله عليه و سلم) அவர்கள் கூறிவிட்டார்கள்.