பக்கம் 3
அதேபோன்று பொது மக்கள் அறிஞர்கள் வழங்கும் பதிலைப் புரிந்து, அதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றுக் கொள்ளும் வழிமுறையைத்தான் அரபியில் தக்லீத் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால், நீங்கள் பெற்றுக் கொள்ளுகின்ற விடயங்களை மற்றொருவா் உங்களிடம் மீட்டிக் கூறுமாறு கேட்கப்பட்டால், உங்களுக்கு அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அதனை விளக்கிக் கூறும் அறிவுத் திறன் உங்களிடம் இருக்காது.
எனவே நீங்கள் இன்னுமொருவருக்கு விளக்கிக் கூற முடியாவிட்டாலும், நீங்கள் செவிமடுத்த ஆதாரங்களைப் புரிந்து அதனடிப்படையில் செயற்படும் போது அது தக்லீதாக அமைந்துவிடுகிறது. இவ்வகையான தக்லீத் பொது மக்களின் மீது அனுமதிக்கப்பட்டதாகும்.
ஆனாலும் இவ்வகையான தக்லீதை செய்பவர்கள் எப்போதுமே அதே நிலையில் இருக்க வேண்டும் என்பதல்ல. அவர்கள் கல்வியைப் பெற்றுக் கொள்வது கடமையாகும். அதன் அடிப்படையில், அவர்கள் தங்களிடத்தில் உள்ள கல்வியில் முன்னேற்றத்தைக் காண வேண்டும். இவ்வாறு கல்வியோடு நெருங்குவதன் மூலம், இன்று புரியாத ஒரு விடயத்தை நாளை புரிந்து கொள்ள முடியும். நாளையும் புரியாவிட்டால், இன்னுமொரு நாளிலாவது புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதுவே அவர்களின் முன்னேற்றமாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.