பக்கம் 1
தக்லீத் என்றால் என்ன?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
பிக்ஹ் விடயத்தில் (தக்லீத்) கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் என்றால், ஒருவர் ஏழு வானத்தில் இருந்து இறக்கப்பட்ட அல்குர்ஆன், அஸ்சுன்னாவின் மொழியான அரபு மொழியை அறியாதவராக இருக்கிறார். இதனால் அல்குர்ஆன், அஸ்சுன்னாவில் இருப்பதை வாசித்து விளங்குவதற்குரிய அறிவு அவரிடத்தில் இல்லை. இருப்பினும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைப் பின்பற்றி நடக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கின்றது.
அரபு மொழியை அறியாதவர் என்பதற்காக, அவர் மார்க்கத்தைப் பின்பற்றாமல் விட்டுவிட்டு ஒரு காபிரைப் போன்று வாழ முடியாது. மாறாக, அவா் தன் வாழ்வில் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்ந்து, சுவனத்தை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இந்நிலையில் இவர் செய்ய வேண்டியது என்ன?
அல்லாஹ் கூறுகிறான்,
فَسْئلُوْااَهْلَ الذِّ كْرِاِنْ كُنْتُمْ لاَ تَعْلَمُوْنَ
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அந்நஹ்ல் : 43)