Skip to content
Part 4 of 5

பக்கம் 4

ஸஹாபா விளக்கமும், சுய விளக்கமும்

ஆனால் மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனத்திற்கு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாணவரான முஜாஹித் இப்னு ஜிப்ரி அல் மக்கி (றஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு விளக்கம் கூறுகிறார்கள்.

مُجَاهِدًا يَقُول : { حَتَّى يَأْتِيك الْيَقِين } قَالَ : الْمَوْت

'யகீன் என்பது மரணத்தைக் குறிக்கிறது'

எனவே, 'மரணம் வரும் வரை உன் இரட்சகனை வணங்குவீராக' என அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக ஒரு மனிதனின் நிலையைப் பொருத்த வரை, அவனுக்கு மரணம் வந்தடைந்ததன பின்புதான், தனது சரியான நிலையை அவன் உறுதியாக அறிந்து கொள்கிறான். அவன் வாழும் வாழ்க்கை ஒரு சக்கரம் போன்று சுழன்று கொண்டிருக்கிறது. எவ்வாறு இரவும் பகலும் வருகிறதோ அதே போன்றுதான்.

மனிதன் உலகில் வாழ்ந்து செயல்பட்டதற்கு ஏற்றவாறு, மறுமை நாளில் அவனுக்கு அதற்கான கூலி வழங்கப்படுகிறது. கூலி வழங்கப்படும் அந்நாளில்தான் மனிதன் தன் நிலையை உறுதியாக அறிகிறான். அந்த யகீன் (உறுதி), அவனது மரணம் அவனை வந்தடைந்த பின்புதான் அவனுக்குக் காட்டப்படுகிறது.

சூபிகள் தங்களுக்கு யகீன் வந்துவிட்டது எனக் கூறி, குறிப்பிட்ட காலத்துடன் அல்லாஹ்விற்கு வணக்கம் செய்வதை நிறுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், மனிதர்களில் சிறந்தவரும், அல்லாஹ்வின் மிகச் சிறந்த அடியாருமாகிய அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விடவும் யார்தான் சிறப்பாக அல்லாஹ்வை வணங்குபவராக இருக்க முடியும். அத்தகையதொரு தரமான நிலையில் அல்லாஹ்வுக்கு வணக்கம் செய்த பின்னாலும், அன்னாரின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிகிறோம்.