Skip to content
Part 2 of 2

பக்கம் 2

சத்தியத்தை பிறருக்கு எத்தி வைப்பது எம் மீது கடமையாகுமா?

அழைப்புப் பணி என்பது பிரசங்கம் செய்வதும், கேள்விகளுக்கு பதில் கூறுவதும் மாத்திரமல்ல. மாறாக, அது பாரியதொரு பொறுப்பையும், கடமையையும் கொண்டதொரு பணியாகும்.

சத்தியத்தைப் பற்றி பிறருடன் பேசுவதும், அது பற்றி எழுதுவதும் சத்தியத்தை எத்தி வைத்தல் என்ற வகைக்குள் அடங்கும் அம்சங்கள்தான். அதற்காக, நீங்கள் வழங்கும் அனைத்து ஒத்துழைப்பும் சத்தியத்தை எத்திவைத்தலில் உள்ளடங்குகின்றது.

சிலருக்கு அல்லாஹ் பேச்சாற்றலைக் கொடுத்துள்ளான். சிலருக்கு எழுத்தாற்றலைக் கொடுத்துள்ளான். சிலர் ஒரு விடயத்தை வாசித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவருக்கென்று தனிப்பட்ட ஆற்றலைக் கொண்டிருக்கும் போது, இவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் எவர் எத்திறமையைக் கொண்டவர் என்பதை அடையாளம் கண்டு அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ப பொறுப்பை ஒப்படைப்பார்.

இதன் மூலம்தான், அந்த ஆசிரியரின் கீழ் கற்பவர்கள் தரமாக வளர்க்கப்படுகிறார்கள். இந்த வழிமுறை ஸஹாபாக்களின் காலம் தொடக்கம் அஹ்லுஸ்ஸுன்னாவின் உலமாக்கள் கையாண்டு வரும் வழிமுறையாகும்.

இந்த வழிமுறையை காலம் காலமாக உலமாக்கள் சீராகக் கடைபிடித்ததன் காரணமாகவே கல்வியின் மீது அநீதி இழைக்கப்படவில்லை. இவ்வடிப்படைகளை உங்கள் கவனத்தில் கொண்டு, கல்வியைச் சுமந்தவர்கள் உங்களுக்கு எதனை நோக்கி வழிகாட்டுகிறார்களோ அதன் பால் செயற்பட வேண்டும். மாறாக, உங்களின் இஷ்டப் பிரகாரம் செயற்பட்டு எல்லை மீறிச் செல்லும் போக்கைக் கையாளாமல் இருக்குமாறு நாம் உபதேசிக்கிறோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.