பக்கம் 1
சத்தியத்தை பிறருக்கு எத்தி வைப்பது எம் மீது கடமையாகுமா?
சத்தியத்தை பிறருக்கு எத்தி வைப்பது எம் மீது கடமையாகுமா?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
நாம் சத்தியம் இன்னது என்று அறிந்ததன் பின்னால் அதனைப் பிறருக்கு எத்தி வைப்பது எம் மீது கடமையாகுமா?
பதில் :
நீங்கள் சத்தியத்தை அடையாளம் கண்டு, அதனை உணர்ந்த பின்பு, ஆதாரங்களை நிரூபிப்பதில் உங்களுக்குப் போதிய அறிவு இல்லாத போது, அதனை எத்தி வைப்பது உங்கள் மீது கடமையில்லை. நீங்கள் கல்வியைத் தரமாகப் பெற்றுக் கொண்டு, அதன் ஆதாரங்களைப் புரிந்த நிலையில், உங்களுக்கு அக்கல்வியைக் கற்றுக் கொடுத்தவர்கள் நீங்கள் கற்றவற்றை எத்தி வைக்குமாறு உங்களுக்கு ஏவினால், அந்நிலையில் பிறருக்கு சத்தியத்தை எத்தி வைப்பது உங்கள் மீது கடமையாகும்.
இந்த விசயத்தில் எவரும் தங்கள் மீது தாங்களாகவே கடமையை சுமத்திக் கொள்ளக் கூடாது.நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நீங்களே எண்ணிக் கொள்ளக் கூடாது.
அல்லாஹ் அல்குா்ஆனில் கூறுகிறான்,
நீங்களே உங்களை (தூய்மையானவர்கள் என எண்ணிக் கெண்டு) பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். (உங்களில்) பயபக்தியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்
(அல் குர்ஆன் : 53:32)
எனவே, உங்களை விடவும் கல்வியில் தரமானவர்கள் உங்களுக்கு எந்தப் பொறுப்பை ஒப்படைத்து, அதனைச் செய்யும் படி வழிகாட்டினார்களோ அந்த எல்லையோடு உங்களை நீங்கள் நிறுத்திக் கொள்வதே உங்கள் மீதுள்ள கடமையாகும். ஆனால், அழைப்புப் பணியில் தானாகவே களமிறங்குபவர், தன்னால் அழைப்புப் பணியை செய்ய முடியும் என்று நினைத்து, தன்னைத் தானே தூய்மையானவராகக் கருதிக் கொள்கிறார்.