பக்கம் 2
ஸஹாபாக்களின் சிறப்பை நாம் ஏன் படிக்க வேண்டும்?
ஸஹாபாக்களின் சிறப்புகளைப் பற்றி நாம் அறிகின்ற போதுதான்,ஸஹாபாக்களில் ஒவ்வொருவரின் தரத்தை உணர்ந்து கொள்ள முடியும். இதன் காரணமாகவே, இமாம்கள் ஸஹாபாக்களின் சிறப்புகளை அறிவிப்புத் தொடர்களின் மூலம் தொகுத்து, தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆனாலும், வெறுமனே ஸஹாபாக்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வதால் மாத்திரம் ஸஹாபாக்களின் விளக்கத்தினை அறிய முடியாது. எனவே ஸஹாபாக்களின் சிறப்புகளுடன், அவர்களின் விளக்கங்களையும் நாம் அறிவிப்புத் தொடர்களின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த விளக்கங்களையும் இமாம்கள் தங்களின் நூல்களில் பதிந்திருக்கின்றார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.