பக்கம் 1
ஸஹாபாக்களின் சிறப்பை நாம் ஏன் படிக்க வேண்டும்?
ஸஹாபாக்களின் சிறப்பை நாம் ஏன் படிக்க வேண்டும்?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
ஸஹாபாக்களின் சிறப்பை நாம் ஏன் படிக்க வேண்டும்?
பதில் :
ஸஹாபாக்களின் சிறப்பை நாம் படிப்பதன் காரணம், அந்த ஸஹாபாக்களின் அந்தஸ்து என்னவென்பதை எமது உள்ளங்களில் உணர்வதற்காகும். அல்லாஹு தஆலா அவர்களுக்குக் கொடுத்துள்ள அந்தஸ்து எத்தகையது என்பதை நாம் விளங்க வேண்டும். அவ்வாறு விளங்கி அந்த ஸஹாபாக்களை நேசிப்பது ஈமானின் ஒரு அம்சமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினாா்கள்,
அன்ஸார்களை நேசிப்பது ஈமானின் ஓரம்சமாகும்
(புஹாரி)