பக்கம் 1
பித்அத்வாதிகள் யார் ?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
பொது மக்கள் பித்அத்வாதிகளை அவர்களின் பெயர்களோடு அறிந்து கொண்டால்தான், அத்தகையவர்களை விட்டும் தூரமாக முடியும். எனவே, நீங்கள் அவ்வாறான பித்அத்வாதிகளின் பெயர்களை எமக்குக் கூற முடியுமா?
பதில் :
பித்அத்வாதிகளின் அனைத்துப் பெயர்களையும் நான் இப்போது குறிப்பிடுவது சாத்தியமல்ல. ஆனாலும் நான், அந்த பித்அத்வாதிகளின் அடையாளங்களைக் காட்டித் தருகிறேன். அதனைக் கொண்டு நீங்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
எவர்களெல்லாம் இயக்கங்களின் தலைவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் பித்அத்வாதிகள்தான்.
இன்னும், உலமாக்களால் ஒரு விசயம் பித்அத் என்றும், தவறு என்றும் நிரூபிக்கப்பட்ட பின்னர் அதனை ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் செய்து வந்த பித்அத்கள் சரி என்று நியாயப்படுத்துவதற்கு தங்களின் பிரச்சாரங்களாலும், கல்வி ரீதியான நடவடிக்கைகளாலும் முயற்சி செய்யும் அனைவரும் பித்அத்வாதிகள்தான்.
இத்தகையவர்களை விட்டும் மக்கள் தூரமாக வேண்டும்.