Skip to content
Part 1 of 2

பக்கம் 1

ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?

ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

கேள்வி :

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஸஹாபாக்கள் றஸுலுல்லாஹ்வையே முற்றிலும் பின்பற்றினார்கள். றஸுலுல்லாஹ்வைப் பின்பற்றுவதே போதுமாக இருக்கும் போது, ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?

பதில் :

இந்த வினாவில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் சொல்வதற்கு இலகுவானதாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தும் நிலையில் இல்லை.

அதாவது, நாம் "எவ்வாறு றஸுலுல்லாஹ்வை நேரடியே பின்பற்றுவது" எனக் கேட்டால், அதற்கு "ஹதீஸ் இருக்கிறதே' எனக் கூறுவார்கள். "அந்த ஹதீஸை சுமந்து வந்தவர்கள் யார்" எனக் கேட்டால் அதற்கு "ஸஹாபாக்கள்தான் அதனைச் சுமந்து வந்தார்கள்| என பதில் கூறுவார்கள்.

அவ்வாறாயின், ஒரு ஹதீஸ் அறிவிக்கும் விடயத்தை வைத்துக் கொண்டு, அந்த ஹதீஸ் எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டது என்று தெரியாமல், அந்த ஹதீஸ் அறிவிக்கும் விடயம் தொடர்பாக கூறும் ஏனைய ஹதீஸ்களை அறியாமல், எவ்வாறு ஒரு ஹதீஸின் அறிவிப்பை மட்டும் பின்பற்றுவது?

எம்மால் தேடிப் பிடிக்க முடியாத இக்கேள்விகளுக்கான பதிலை, நாம் ஸஹாபாக்களின் பால் திரும்பினால்தான் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்களின் நடவடிக்கைகளில்தான், றஸுலுல்லாஹ்வை பரிபூரணமாகப் பின்பற்றும் வழிமுறையை நாம் காண முடியும்.

சுன்னா என்பது ஒரு நபிமொழியைக் கூறிக் காட்டுவதல்ல. மாறாக, அந்நபிமொழி ஸஹாபாக்களின் காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவ்வாறே நடைமுறைப்படுத்துவதே சுன்னாவாகும்.

இந்த அடிப்படையை அறியாத சிலர் ஸஹீஹுல் புஹாரியில் இருந்து ஒரு ஹதீஸைக் காட்டி, அதிலிருந்து சட்டத்தையும் எடுத்து இறுதியில் இதுதான் சுன்னா என்கிறார்கள். இங்கு ஹதீஸ் ஸஹீஹாகவும், தரமாகவும் இருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த ஹதீஸின் விளக்கமும் தரமாகவும், சரியாகவும் இருக்க வேண்டும்.