Skip to content
Part 5 of 5

பக்கம் 5

உண்மையான உலமாக்களை அடையாளம் காணத் தவறிய முஸ்லிம் சமூகம்

இதன் மூலம் தாங்கள் வாழ்கின்ற நாடுகளிலு,ம் வீடுகளிலும் வழிகெட்ட நூல்களை அறிமுகப்படுத்தி, இந்த வழிகெட்ட கொள்கைகளை பூமியெங்கும் பரப்பி விட்டனர். இது போன்ற ஆபத்துக்களை நாம் அடையாளம் காண்பதற்கு, உலமாக்கள் பற்றிய உண்மைகளை நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.

இந்த உம்மத்தின் உண்மையான உலமாக்கள்,

  • ஸஹாபாக்களின் பாதையை விட்டும் ஒருபோதும் வேறொரு பாதையைத் தெரிவு செய்ய மாட்டார்கள்.
  • மார்க்கத்தின் எந்த ஒரு விடயத்திலும் ஸஹாபாக்களின் வழிமுறையைத் தவிர்ந்து கொள்ள மாட்டார்கள். 

நிச்சயமாக ஸஹாபாக்களின் பாதையைத் தவிர்ந்து கொண்டவர்கள், உலமாக்களாக இருப்பதற்குத் தகுதியானவர்களல்ல.

இத்தகையவர்கள் மார்க்கம் என்ற பெயரிலும், கல்வி என்ற பெயரிலும் விஷத்தைக் குடித்திருக்கினறனா். இந்த விஷத்தின் தாக்கம் காரணமாக, அவர்கள் உலமாக்களின் அந்தஸ்தை அடைவதற்கு வாய்ப்பில்லை. மேலும் இவா்கள் அல்லாஹ்வின் வேதத்தைத் திறந்து, அதன் வசனங்களைத் தங்கள் சுய புத்தியினால் விளக்கம் கொடுக்கின்றனா். இன்னும் தாங்கள் வாழும் சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறும், தங்களின் தேவைக்கேற்றது போன்றும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும், பிக்ஹின் சட்டங்களையும் அமைத்துக் கொள்கின்றனர்.

மக்கள் அதிருப்தியடையாதவாறு, அதன் விளக்கங்களைக் கூறுகின்றனர். எனவேதான் அவர்கள், ஸஹாபாக்களின் விளக்கத்தைக் கையாளத் தெரியாத அறிவிலிகளாக இருக்கின்றனர்.

எனவேதான் இப்பண்புகளைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் தகுதியான உலமாக்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.

அல்லாஹ் மிக அறிந்தவன்