பக்கம் 3
உண்மையான உலமாக்களை அடையாளம் காணத் தவறிய முஸ்லிம் சமூகம்
இன்று பலர் அல்குர்ஆனுக்கு கொடுக்கின்ற விளக்கங்களைக் கவனிக்கும் பொழுது,
- அவ்விளக்கங்களை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது தெரியவில்லை.
- அவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை, வரலாற்றில் எந்தவொரு முபஸ்ஸிரீன்களும் கொடுத்ததில்லை.
- அதே போன்று அவர்கள் யாரிடத்தில் அல்குர்ஆனின் கல்வியைக் கற்றார்கள் என்பதும் அறியப்படவில்லை.
இத்தகைய தன்மை உள்ளவர்களை, அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறத் தகுதியானவர்கள் என நாம் கூற முடியுமா?
இஸ்லாமிய வரலாற்றில், யாரெல்லாம் அல்குர்ஆனுக்கு தங்களின் தனி விளக்கங்களைக் கொடுக்க முன்வந்தார்களோ, அத்தகையவர்களின் விளக்கங்களைக் கவனித்த கல்வியைச் சுமந்த உண்மையான உலாமாக்கள் எவரும், அவ்விளக்கங்களை கல்வியுடன் தொடர்புள்ள விளக்கமாகக் கருதியதில்லை. மாறாக அவைகளை கண்டபோதெல்லாம் அதற்கு மறுப்பும், விமர்சனமும் செய்யவதற்கு உலமாக்கள் தவறவில்லை.
இன்னொரு விதமாகச் சொன்னால், அத்தகைய விளக்கங்களை பொது மக்கள்தான் சிறப்பான விளக்கமாகக் கருதினார்கள். இதனால் முழுக்க முழுக்க குப்ரையும், ஷிர்க்கையும், வழிகேடுகளையும் கொண்ட நூல்கள் முஸ்லிம் சமூகத்தில் சிறப்பான நூல்களாகவும், சிறப்பான தப்ஸீர்களாகவும் மதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, இஸ்லாமிய உம்மத்தினுள் நூல்கள் மூலம் வழிகேடுகளைப் பரப்பிவிட்ட வழிகேடர்களுக்கு உலமாக்கள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட தகுந்தவா்களான செய்யித் குத்ப், மௌதூதி, அஷ்ரப் அலி தானவி, ஸகரிய்யா காந்தலவி, முஹம்மது ஷபீஃ அல் முப்தி,பி.ஜெய்னுல் ஆபிதீன் போன்றவர்கள் அல்குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்தவர் ஆவாா்கள். இவர்கள் தப்ஸீரின் பெயரில் தங்களின் கெட்டித்தனத்தைக் காட்டினார்கள்.
ஆனால் இவர்களின் விளக்கங்களைக் கண்ட அனைத்து சுன்னாவின் உலமாக்களும் இவர்களை விமர்சிக்காது விடவில்லை. இவர்களைப் பார்த்து சுன்னாவின் உலமாக்கள்
- பித்அத்வாதிகள் என்றும்
- உம்மத்தினுள் வழிகேடுகளைப் புகுத்தியவர்கள் என்றும்
- கல்வியை முறையை தவறிக் கையாண்டவர்கள் என்றும்
- இஸ்லாத்தின் எதிரிகள் என்றும்
இந்த உம்மத்துக்கு அவர்களைப் பற்றியும் அவர்களின் நூல்களைப் பற்றியும் எச்சரித்தார்கள்.