பக்கம் 2
கப்றுஸ்தானத்தில் குர்ஆன் ஓதலாமா?
கேள்வி கேட்டவர் :
குர்ஆனில் அவ்வாறு ஓத வேண்டாம் என்று ஆதாரம் இல்லையே?
பதில்:
அதற்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
தூதர் எதனைத் தந்தாரோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். எதனை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் பித்அத்களை விட்டும் தடுத்துள்ளார்கள். எனவே அதனை செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும். நீங்கள் குர்ஆனை ஓதி நன்மையைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் உங்கள் வீடுகளில் ஓதிக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.