பக்கம் 1
கப்றுஸ்தானத்தில் குர்ஆன் ஓதலாமா?
கப்றுஸ்தானத்தில் குர்ஆன் ஓதலாமா?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
கப்றுஸ்தானத்தில் குர்ஆன் ஓதலாமா?
பதில் :
மார்க்க விடயத்தில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்யாத ஒன்றை செய்வது புதிதாக உருவாக்கப்பட்டதாகும். அவ்வாறு புதிதாக உருவாக்குவதை அல்லாஹ்வின் தூதர் தடுத்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
எல்லா புதிய விடயங்களும் பித்அத் ஆகும். எல்லா பித்அத்களும் வழிகேடு. எல்லா வழிகேடும் நரகத்தில்.
கேள்வி கேட்டவர் :
குர்ஆன் ஓதுவது நன்மைதானே?
பதில் :
மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நன்மையை எதிர்பார்த்து செய்வதுதான் பித்அத் ஆகிறது. நீங்கள் கப்றுக்கு சென்று குர்ஆன் ஓதுகிறீர்கள் என்றால், அது இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம்.
- மரணித்தவருக்கு நன்மை கிடைக்கும் என்று ஓதுகிறீர்கள்.
- இரண்டு, உங்களுக்கு நன்மை கிடைக்குமென்று கருதி ஓதுகிறீர்கள்.
இவ்விரண்டில் எதுவாக இருப்பினும், மார்க்க விடயத்தில் இல்லாத ஒன்றை நன்மையை எதிர்பார்த்து செய்வதால் அது பித்அத் ஆகிறது. அவ்வாறு செய்வதை மேலே கூறிய நபிமொழி தடுக்கிறது.