Skip to content
Part 3 of 3

பக்கம் 3

இமாம்களின் வார்த்தைகளைப் பின்பற்றுவதற்கான நிபந்தனை என்ன?

ஒரு ஆலிம், ஒரு விடயத்தை ஏன் ஹராமென்று கூறினார் என்பதைக் கவனிப்பது முக்கியமானதாகும். அவர் அல் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் ஆதாரபூர்வமாக ஒரு விடயத்தை நிரூபித்தால், அதனை எடுத்துக் கொள்வது கடமையாகும். அது அவருடைய தனிப்பட்ட கருத்தல்ல. மாறாக, அவர் பொது மக்களுக்குத் தெரியாத விஷயங்களை, கல்வியின் அடிப்படையில் அதனைக் கூறியிருக்கிறார். அதற்குரிய நன்மையை அவர் பெற்றுக் கொள்வார்.

அந்த ஆலிம் உண்மையை கல்வியின் மூலமாக கூறிய பின்னாலும், அதனைப் பின்பற்றாமல் இருப்பவர்கள் பாவத்தைச் சுமந்து கொள்ள நேரிடும்.  அதே வேளை, ஒரு ஆலிம் அல் குர்ஆன், அஸ்ஸுன்னாவிலிருந்து ஆதாரத்தைக் காட்டவில்லை என்றால் அது பின்பற்றுவதற்கு தகுதியற்றதாக அமைகிறது.

 அல்லாஹ்வே மிக அறிந்தவன்.