Skip to content
Part 4 of 4

பக்கம் 4

உம்மத்தில் பிரியும் 72 வழிகெட்ட கூட்டங்கள் பற்றி ஓரு சுருக்கமான பார்வை

எனவே, இன்று நம் சமூகத்தில்

  • ஒருவன் வந்து அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் தர்க்கத்தின் அடிப்படையில் விளங்கக் கூடியவனாக இருந்தால், அவன் முஃதஸிலாவின் கொள்கையைச் சேர்ந்தவன் என்பதை நாம் அடையாளம் காணலாம்.
  • அதே போன்று ஒருவன் ஸஹாபாக்களை குறைக் கூறி பேசினால் அவன் ரவாபிழ் என்ற கூட்டத்தின் கொள்கையைக் கொண்டவன் என்பதை நாம் இனம் காணலாம்.
  • அதே போன்று ஒருவன் ஸஹாபாக்களின் விளக்கம் நமக்கு அவசியமில்லை என்று வாதிட்டால் அவன் ஹவாரிஜ் என்ற பிரிவில் சேர்க்கப்படுவான்.
  • அதே போன்று ஒருவன் ஈமானைப் பற்றிக் கூறும் போது, ஈமானை நாம் உள்ளத்தினால் நம்பினால் போதுமானது. பாவம் செய்தாலும், செய்யாவிட்டாலும் நன்மை செய்வதற்கு முயற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் அது உங்கள் ஈமானைப் பாதிக்காது எனக் கூறினா். மேலும் மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யாமலும், நன்மைளை எடுத்துக் காட்டி வழிகாட்டாமலும், நன்மையின் பால் ஆர்வமூட்டாமலும் இருக்கின்றவன் முர்ஜிஆ என்ற வழிகெட்ட கொள்கையைச் சுமந்தவன் என்பதை நாம் அறியலாம்.

எனவேதான் பிரிவுகள் பற்றிய அறிவை நாம் கல்வி மூலமாக பெற்றிருப்பதன் மூலம், ஒருவனுடைய கொள்கைக்குப் பின்னால் இருக்கும் வழிகேடு என்னவென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த 72 கூட்டங்களைப் பற்றி,

1.இமாம் அபுல் ஃபரஜ் அப்துர்ரஹ்மான் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) – தல்பீஸ் இப்லீஸ் என்ற நூலிலும்

2.இமாம் ஷஹ்ரஸ்தானி (ரஹிமஹுல்லாஹ்) – அல் மிலல் வந்நிஹல் என்ற நூலிலும்

3.இமாம் இப்னு ஹஸ்ம் அந்துலூஸி (ரஹிமஹுல்லாஹ்) – அல் பிஸல் பில் மிலல் என்ற நூலில்

4.இமாம் அப்துல் காஹிர் பக்தாதி (ரஹிமஹுல்லாஹ்) – அல் பர்க் பைனல் பிரக் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்கள்.

இவர்களைப் போன்று இன்னும் பல இமாம்கள் பிரிவுகளைப் பற்றிய பாடத்தில், வழிகேடுகளின் அடிப்படைகளை எடுத்துக் காட்டுவதற்காக பிரிவுகளின் முக்கிய ஆறு அடிப்படைகளையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.