பக்கம் 2
ஸலபி அழைப்புப் பணியின் அளவுகோலும், அதனை விட்டு வெளியேற்றும் காரணிகளும்
அலி ஹஸன் கல்வியில் தரமாக இருந்த போதும், காலங்கள் செல்கையில் அஹ்லுல் பித்அத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டாா். பணத்தினாலும், அந்தஸ்தினாலும், புகழினாலும் எற்படும் பித்னாவின் நோயில் அகப்பட்டு இறுதியில் ஸலபி தஃவாவை விட்டும் விலகி, ஸலபி தஃவாவோடு விளையாடக் கூடியதொரு மனிதனாக மாறிவிட்டார்.
அது மட்டுமின்றி அலி ஹஸன் ஸலபிகளின் எதிரிகளோடு தோழமை கொள்வதற்கும், ஸலபி அழைப்பாளர்களுக்கு எதிராக சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் களமிறங்கினார். இன்றைய காலத்தில் வாழ்கின்ற மூத்த ஆலிமும், முஹத்திஸும், ஜரஹ் வத் தஃதீலின் இமாம் என்று அழைக்கப்படக் கூடியவருமான ஷெய்க் அல் அல்லாமா ரபீ இப்னு ஹாதி உமைர் அல் மத்ஹலி ஹபிழஹுல்லாஹ் அவர்களோடும், மேலும் அவரோடுள்ள உலமாக்களுக்கு எதிராகப் போராடுவதற்கு அலி ஹஸன் களமிறங்கினார்.
ஸலபிய்யாவின் வழிமுறைக்கு முரணாகச் செயற்பட முற்பட்டதனால், அலி ஹஸன் சிறப்பான ஒரு ஆலிமாக இருந்த போதும், ஸலபிய்யாவை விட்டும் வெளியேற்றப்பட்டவராக மாறினார்.
ஆகவே,
ஸலபி தஃவா என்பது எந்தவொரு ஆலிமுக்கும் பின்னால் கண்மூடித்தனமாகச் செயற்படுகின்ற ஒரு தஃவா அல்ல.
மாறாக, அது ஒரு அடிப்படையோடு செயற்படுவதாகும். யார் அவ்வடிப்படைக்கு மாற்றமாகச் செயற்பட்டு, ஸலபிய்யாவின் வழிமுறையல்லாத வேறொரு வழிமுறையைக் கையாள்கிறாரோ, அவர் ஸலபி தஃவாவோடு உள்ள அவரது தொடர்பை துண்டித்து விட்டார்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.