Skip to content
Part 1 of 2

பக்கம் 1

ஸலபி அழைப்புப் பணியின் அளவுகோலும், அதனை விட்டு வெளியேற்றும் காரணிகளும்

ஸலபி அழைப்புப் பணியின் அளவுகோலும், அதனை விட்டு வெளியேற்றும் காரணிகளும்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

ஸலபி தஃவா என்பது அல்குர்ஆனையும், அஸ்சுன்னாவையும் ஸஹாபாக்களின் அடிச்சுவடில் விளங்கி,அதனை நடைமுறைப்படுத்துவதின் பால் அழைக்கும் அழைப்புப் பணியாகும். இ்ந்த வழிமுறையை எவர்கள் சரியாகக் கையாள்வார்களோ, அவர்களின் அழைப்புப் பணி ஸலபி அழைப்புப் பணியாக அமைந்து விடும்.

ஸலபி அழைப்புப் பணியை செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டதனால் மாத்திரம் ஸலபிய்யாவை எவரும் உரிமை கொண்டாட முடியாது.

ஏனென்றால், ஸலபிய்யா என்பது ஒரு தனித்துவமான வழிமுறையோடு அமைந்ததாகும். அவ்வழிமுறைக்கென ஓர் அளவுகோல் இருக்கிறது. இன்னும், அதற்கென அடிப்படைகள் இருக்கிறது. இந்த அளவுகோலையும், அடிப்படையையும் சரியாக சுமந்தவர் ஸலபி அழைப்புப் பணியைச் சுமந்தவராக அமைவார்.

அவ்வாறு தகுதியானவராக இருக்கும் நிலையில், எப்பொழுதாவது ஸலபி அழைப்புப் பணியின் அடிப்படை இல்லாத அல்லது அதற்கு மாற்றமான அடிப்படையைக் கையாண்டு, ஸலபிய்யாவுக்கு மாற்றமாகச் செயற்பட்டால், அப்பொழுதே ஸலபிய்யாவை விட்டும் வெளியேறியவராகக் கருதப்படுவார். இதற்கு தற்காலத்தில் பொருத்தமான உதாரணமாக அலி ஹஸன் அப்துல் ஹமீத் அல் ஹலபி என்பவரைக் குறிப்பிடலாம்.

அலி ஹஸன் அப்துல் ஹமீத் அல் ஹலபி என்பவர் ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் இடத்தில் கல்வியைத் தரமாகக் கற்று, சிறப்புமிக்க மாணவராக இருந்தாா். மேலும் ஷெய்க் அல்பானியின் தஃவத்தில் அவரோடு சேர்ந்து உழைத்தவராகவும் இருந்தாா்.