Skip to content
Part 1 of 2

பக்கம் 1

இஸ்லாமிய பரிபாஷையில் பிறை என்றால் என்ன?

இஸ்லாமிய பரிபாஷையில் பிறை என்றால் என்ன?

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

எமது மார்க்கத்துக்கும், ஏனைய மதங்களுக்கும் பிறை விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட அடிப்படை காணப்படுகிறது. பிறை என்ற வார்த்தைக்குரிய வரைவிலக்கணம் ஏனைய மதங்களின் பிறை என்பதற்கு உள்ள வரைவிலக்கணத்திலிருந்து முற்றிலும் மாற்றமானதாகும்.  

பூமியில் நின்று கண்களால் பிறையைக் கண்டு, அவ்வாறு காணப்பட்ட பிறையே இஸ்லாத்தில் பிறை எனப்படுகிறது.

இந்த வழிமுறை ஏனைய மதங்களில் இல்லை.

எமது மார்க்கத்தில் பிறை என்பது, மனித சமூகத்தில் ஷஹாதத் மொழிந்த முஸ்லிம்கள் எவரும் காணவில்லையென்றால் அதனைக் கொண்டு வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக் கொள்ளாது. இந்நிபந்தனை ஏனைய எந்த மதத்திலும் கிடையாது. இஸ்லாத்தில்தான் பிறையைக் கொண்டு மாதத்தின் ஆரம்பமும், முடிவும் தீர்மானிக்கப்படுகிறது. ஏனைய மதங்களில், பிறை என்பது மாதத்தினை தொடங்கி வைக்கும் ஒரு விடயமாகக் கருதப்படுவதில்லை.  

பிறை என்று மொழி ரீதியாக இரண்டாம் பிறையையும், மூன்றாம் பிறையையும் கூட அழைக்கலாம். ஆனால் அறபி மொழியில், பிறையை குறிப்பதற்கு கையாளப்படும் ஹிலால் என்ற வார்த்தை, தலைப்பிறையை (முதலாம் பிறையை) மாத்திரமே குறித்து நிற்கிறது. 

எனவே முஸ்லிம்கள் தங்களின் நோன்பையும், பெருநாளையும்

  • இரண்டாம் பிறை, மூன்றாம் பிறையையைக் கொண்டு முடிவு செய்ய வேண்டுமா? அல்லது
  • தலைப்பிறையைக் (முதலாம் பிறையை)  கொண்டு முடிவு செய்ய வேண்டுமா? 

என்பதை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிய வேண்டும்.

ஏனென்றால்,

صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ

பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள், பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள்

என்ற ஹதீஸின் வார்த்தையைக் கூறிக் காட்டி நாங்கள் எங்கள் நாட்டில் பிறையைக் கண்டால் மட்டுமே நோன்பு வைப்போம், நோன்பை விடுவோம் என்ற அடிப்படையை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்கள் நோன்பு வைப்பதும், நோன்பை விடுவதும் இரண்டாம் பிறையை அல்லது மூன்றாம் பிறையை கொண்டு செய்கிறாா்கள் தவிர தலை பிறையை  கொண்டு அல்ல. இதனால் அவா்கள் தலை பிறையை பொருட்படுவது இல்லை

ஆனால் நோன்பு ஆரம்பமாவதும், அது முடிவடைவதும் தலைப் பிறையை (முதலாம் பிறை அல்லது ஹிலாலை)க் கொண்டுதான் தீர்மானிக்கப்பட வேண்டும். தலைப் பிறைதான் ஹிலால் எனப்படுகிறது. இவ்வடிப்படையை முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டும்.