Skip to content
Part 3 of 5

பக்கம் 3

ஸஹாபாக்களை பின்பற்றுவதற்கு அல்-குா்ஆன்,அஸ்-ஸுன்னாவில் இருந்து ஆதாரம்

எனவே இந்த இயக்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் P.ஜெய்னுல் ஆபிதீன் என்ற அவ்வியக்கத்தின் தலைவரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். இதே அடிப்படையில் அஷ்அரிய்யா என்ற வழிகெட்ட கொள்கையைச் சுமந்த அபுல் அஃலா மௌதூதி என்பவரால் ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதே போன்று இல்யாஸ் ஹான்தலவி என்பவரால் தப்லீக் ஜமாஅத் என்ற இயக்கம் நிருவப்பட்டது. இதுதான் இயக்கங்கள் அனைத்தும் உருவானதன் அடிப்படையாகும். ஆனால் இதற்கு மாறாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் தலைவர் றஸுலுல்லாஹ்வைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

யாரெல்லாம் அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஸஹாபாக்களின் சமூகம் விளங்கி நடைமுறைப்படுத்திய பிரகாரம் தாங்களும் விளங்கி செயற்படுகிறார்களோ அவர்கள் கூட்டமாக வாழ்ந்தாலும், தனி மனிதனாக வாழ்ந்தாலும் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் பாதையில் இருப்பவர்களாவர். எனவே ஸஹாபாக்களின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் எவ்வாறு அல் குர்ஆனை விளங்க வேண்டுமென்பதும், நபியைப் பின்பற்ற வேண்டுமென்பதும் இஸ்லாத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தான் எமக்கு அல் குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் தெட்டத் தெளிவாக வழிகாட்டுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்,

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ‏

நீங்கள் ஈமான் கொண்டது போன்று அவர்களும் ஈமான் கொண்டால் அவர்கள் நேர்வழி அடைவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக அவர்கள் பிரிவில்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் செவியேற்கின்றவன். மிக்க அறிந்தவன். (அல் பகரா : 137)

மேற்கூறிய இறைவசனத்தில், 'நீங்கள் ஈமான் கொண்டது போல்' என்று அல்லாஹ் விளித்துக் கூறுவது றஸுலுல்லாஹ்வையும், ஸஹாபாக்களையும் தவிர வேரெவரையுமல்ல.

ஈமான் என்பது உள்ளத்தால் நம்புவதும், நாவால் மொழிவதும், உடலுருப்புகளால் செயற்படுத்துவதுமாகும்.

எனவே ஸஹாபாக்கள் நம்பிக்கை கொண்டது போன்றும், அவர்கள் சொன்னது போன்றும், அவர்கள் செயற்பட்டது போன்றும் எமது காரியங்களை அமைத்துக் கொள்வதுதான், அந்த ஸஹாபாக்கள் ஈமான் கொண்டது போல் நாமும் ஈமான் கொண்டதாக அமையும். அதுவே நேர்வழியின் அடிப்படையாகும். அதன்பால்தான் அல்லாஹ் வழிகாட்டுகின்றான். எனவே ஸஹாபாக்களுக்குப் பின்னால் கியாமத் வரை வருகின்ற அனைத்து மனிதர்களுக்கும் அன்று றஸுலுல்லாஹ்வும், ஸஹாபாக்களும் எவ்வாறு செயற்பட்டார்களோ, அவ்வாறு செயற்படுவதுதான் அவர்கள் நேர்வழியில் இருப்பதற்கு உத்தரவாதமாகும். அதனைப் புறக்கணித்து ஒரு சாணளவு தூரமானாலும், அவர்கள் ஒரு பிரிவை உருவாக்கி நேர்வழியை விட்டும் பிரிந்து சென்று விடுவார்கள்.