Skip to content
Part 4 of 4

பக்கம் 4

அல் குர்ஆனின் வரைவிலக்கணம்

அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா அஷ்ஷுறா என்ற அத்தியாயத்தில் கூறுகிறான்,

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيْعُ البّصِير

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் அனைத்தையும் செவியேற்பவனும் அனைத்தையும் காண்பவனுமாவான். (அஷ் ஷுறா :11)

அவனைப் போன்று எதுவுமில்லை என்றால், நாம் எவ்வாறு எமது செயலையும், அல்லாஹ்வின் செயலையும் ஒரே தன்மை கொண்டதாகக் கருத முடியும்?

அல்லாஹ்வுக்கு உள்ள பெயர்களும், பண்புகளும் அவனுக்கு மாத்திரமே தனித்துவமானவையாகும்.

முஃதஸிலாக்களின் இந்த பித்னாவில்தான், தென் இந்தியாவைச் சேர்ந்த பி. ஜே. என்பவரும் மாட்டிக் கொண்டார். அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கும் போக்கு இவரிடமும் இருக்கிறது. தவ்ஹீதைப் பிரச்சாரம் செய்கிறேன் என்று முன்வந்து, இறுதியில் அல்லாஹ்வின் பண்புகளுக்கு மாற்றுக் கருத்தைக் கூறி மறுக்கும் போக்கைக் கையாண்டு, தவ்ஹீதை நிலைநாட்ட வந்தவர் குப்ரைப் பிரச்சாரம் செய்கிறார்.

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில், வழிகேடான கருத்துகளைப் புகுத்தி, நம்பிக்கையைக் குழப்பிவிட்ட முஃதஸிலாக்களின் நோயினால் இந்த இஸ்லாமிய உம்மத் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தார்கள். அதனால்தான், அல்லாஹ்வின் பேச்சு என்ற பண்பையும் மறுத்தார்கள். இதன் காரணமாக அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சல்ல என்றும், அதனை அல்லாஹ் ஒரு படைப்பாகவே அவனது தூதருக்கு அனுப்பினான் என்றும் இவர்கள் தங்களின் விளக்கத்தைக் கொடுத்தார்கள்.

இந்த வழிகேடான கருத்து வெளிவந்த போது உடனே உலமாஉல் முஸ்லிமீன் இதற்கு மறுப்பாக பதில் கொடுத்தார்கள். அல் குர்ஆன் படைப்பல்ல என்றும், அது அல்லாஹ்வின் பேச்சு என்றும் அவ்வறிஞர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.