Skip to content
Part 1 of 4

பக்கம் 1

அல் குர்ஆனின் வரைவிலக்கணம்

அல் குர்ஆனின் வரைவிலக்கணம்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

ஏழு வானங்களின் மேல் இருந்து இறக்கப்பட்டது அல்குர்ஆன். அதனை விளங்குவதற்கு மிக அடிப்படையான ஒரு பகுதி, அதன் வரைவிலக்கணத்தை அறிந்து கொள்வதாகும். அல் குர்ஆன் ஒரு வேதமாகும். இது ஏனைய நூல்களைப் போன்று ஒரு சாதாரணமான நூலல்ல. இதனைப் பிரித்துக் காட்டுவதற்கு அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தின் கொள்கையைச் சுமந்த இமாம்கள், அல் குர்ஆனுக்கு ஒரு வரைவிலக்கணத்தைக் கூறி இருக்கிறார்கள்.

அதாவது,

  • அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும்.
  • அது ஒரு படைப்பல்ல.
  • அது அவனிடமிருந்தே ஆரம்பமானது.
  • இன்னும் அவனிடமே திரும்பும்.

அல் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சு என்று குறிப்பிட்டுக் காட்டுவதன் காரணம், முஃதஸிலா என்ற வழிகேடான கொள்கையைச் சுமந்தவர்கள் அல்லாஹ்வின் பெயர்களுக்கும், பண்புகளுக்கும் முரண்பட்ட கருத்துகளைக் கூறினார்கள். இவர்கள் கிறிஸ்தவர் யூதர்களின் மார்க்கத்தின் அடிப்படையாக இருக்கும் தர்க்கம் منطق, தத்துவக் கல்வி فلسفة, போன்ற கல்விகளை இஸ்லாத்தினுள் புகுத்தினார்கள்.

இக்கல்விகள் நம்முடைய மார்க்கத்தினுள் புகுந்த பாதிப்பினால் முஃதஸிலா என்ற கூட்டம் உருவாகினது. அவா்கள் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் விளங்குவதற்கு, தர்க்கத்தினை வழிமுறையாக ஆக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அவர்களின் புத்திக்கு, எதுவெல்லாம் முரணாகத் தோன்றுகிறதோ, அதனை எல்லாம் மறுக்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகளில் ஒன்றுதான், இவர்கள் ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வை தங்களின் புத்தியினாலும், சுய விளக்கங்களாலும் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தார்கள்.

அல்லாஹு (ஸுப்ஹானஹு வதஆலா) அவனுடைய பண்புகளைக் கொண்டு, அவனைப் பற்றிக் கூறியவற்றை முஃதஸிலிகள் மறுத்துக் கூறினா். மேலும் இவர்களின் அறிஞர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை எவ்வாறு விளங்க வேண்டும் என்று பல விளக்கங்களைக் கூறினார்கள்.